கல்கி பட இயக்குநருடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை.. கல்கி 2 படத்திற்கு முன்பு இயக்க திட்டம்!

ஐதராபாத்: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டில் வெளியான கல்கி 2898 ஏடி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி ரூபாய்களுக்கு மேல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்திருந்தது. படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

குறிப்பாக படத்தில் அமிதாப்பச்சனின் கேரக்டர் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குநர் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டில்தான் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Kalki 2898 AD movie Nag Ashwin Alia bhat

கல்கி 2898 ஏடி படம்: நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியானது கல்கி 2898 ஏடி படம். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் நாக் அஸ்வின் உருவாக்கியிருந்தார். முன்னதாக கீர்த்தி சுரேஷ் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான மகா நடி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற நாக் அஸ்வின், கல்கி படத்தின்மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ்: இதற்கான ப்ரீ புரொடக்ஷ்ன்ஸ் வேலைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்த நிலையில், அடுத்ததாக அவர்களுடன் நாக் அஸ்வின் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்கி 2 படத்தில் பிரபல நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளனர். தீபிகா படுகோனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவரும் நடிப்பிலிருந்து சில மாதங்கள் ஓய்வில் உள்ளார்.

நாக் அஸ்வின் -ஆலியா பட் கூட்டணி: இதன் காரணங்களால் கல்கி 2 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போயுள்ளது. இதனிடையே, இடைப்பட்ட காலத்தில் பிரபல நடிகை ஆலியா பட்டுடன் இணைந்து நாக் அஸ்வின் படமொன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்படும என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ள நிலையில், படம் வரும் நம்பவர் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் கல்கி 2 சூட்டிங்: தற்போது ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுசலுடன் இணைந்து லவ் அண்ட் வார் படத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட். படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் வரை நடக்கவுள்ள நிலையில், இநத்ப் படத்தை நிறைவு செய்துவிட்டு நாக் அஸ்வினுடன் ஆலியா பட் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இநத்ப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்த ஆண்டு கோடையில் கல்கி 2 படத்தின் சூட்டிங்கை நாக் அஸ்வின் துவங்கவுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டிற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X