விமர்சகர்களுக்கு ஆப்பு.. 25 கோடி கேட்டு கல்கி டீம் வழக்குப்பதிவு.. அப்போ ப்ளூ சட்டை மாறன் நிலைமை?

சென்னை: நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த மாதம் இறுதியில் வெளியானது கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுக்கு காட்சிகள் குறைவுதான்.

கல்கி 2898 ஏடி படத்தின் 2வது பாகம் வரும் 2026ம் ஆண்டில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பாகத்தில்தான் தனக்கு வில்லனாக வேலைகள் அதிகம் என்று கமல்ஹாசன் முன்னதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Prabhas Kalki 2898 AD Kamal haasan Nag Ashwin 2898

கல்கி 2898 AD படம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் இறுதியில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது கல்கி 2898 ஏடி படம். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் புராண காலங்களையும் இணைத்து இந்த படத்தின் கதைக்களத்தை இயக்குனர் நாக் அஸ்வின் உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்காக அவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளை செலவழித்துள்ளார். அவரது உழைப்பிற்கான அறுவடையை தற்போது அவர் செய்து வருகிறார்.

கலவையான விமர்சனங்கள்: கல்கி 2898 ஏடி படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கான வசூல் மழையில் குறை ஒன்றும் இல்லை. ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த போதிலும் இந்த படத்தின் வசூல் எண்ணிக்கை மட்டும் குறையாமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவும் சரி, தற்போது படம் ரிலீசாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் சரி படத்தின் பிரமோஷன்களை அவர்கள் நிறுத்தியபாடாக இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் ஹீரோ பிரபாஸ் தன்னுடைய நன்றி வீடியோவை தயாரிப்பு தரப்பின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பிரபாஸ் நெகிழ்ச்சி: நாக் அஸ்வின் உழைப்பு மற்றும் தயாரிப்பாளர்களின் அரவணைப்பு ஆகியவற்றை அவர் மெய்சிலிர்ப்புடன் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களையும் பெற தவறவில்லை. தொடர்ந்து படத்தின் மீதான அவதூறுகளை பல சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கல்கி 2898 ஏடி படம் இத்தகைய அவதூறுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியில் சுமித் கடேல், ரோஹித் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்கள் மீது அவதூறு கருத்துக்களை பகிர்ந்ததாக கல்கி டீம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கல்கி டீம் வழக்குப்பதிவு: கல்கி டீம் 1000 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தவறான நம்பர்களை கூறுவதாக இவர்கள் தங்களது எக்ஸ் தள பக்கங்களில் அடுத்தடுத்த ட்வீட்களை பகிர்ந்திருந்தனர். இதையடுத்தே இதற்கான விளக்கம் கொடுக்க வேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு வழக்குப் பதிந்துள்ளது. இதனிடையே, இது போன்ற வேலைகளை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் தமிழில் செய்து வருகின்றனர். அவர்கள் மீதும் படக் குழுவினர் வழக்குப் பதிவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X