Kalki: அட என்னப்பா பிரபாஸ்க்கு விஜய் பட டைட்டில் கிடைச்சிருக்கே.. மகாசிவராத்திரி ட்ரீட் இதுதான்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த "நடிகையர் திலகம்" படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக "கல்கி 2898 AD" என்னும் படம் உருவாகி வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறதா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி என்றால் கல்கி என்னும் பெயரில் தானே பிரபாஸ் நடித்திருப்பார். அல்லது விஷ்ணுவை குறிக்கும் ஏதாவது ஒரு பெயர் பிரபாஸுக்கு வைக்கப்பட்டிருக்கும் எனக்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வித்தியாசமாக சிவனின் பெயர் பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

Kalki 2898 AD movie Prabhas character title is Bhairava

நடிகையர் திலகம்: கடந்த 2018 ஆம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான நடிகர் திலகம் படம் தெலுங்கில் மகாநடி என்கிற பெயரில் உருவானது. தமிழில் நடிகையர் திலகம் என டப் செய்யப்பட்டது. இந்த படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கல்கி படத்திற்காக நாக் அஸ்வின் கடுமையாக உழைத்து வருகிறார்.

கல்கி 2898 ஏடி: அமிதாபச்சன், கமல்ஹாசன் என திரை உலகில் முதிர்ச்சி பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பிரபாஸ் கல்கி படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என இரு பாலிவுட் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கோலிவுட் நடிகரான பசுபதி நடித்து வருகிறார். கொடியவர்களின் கையில் சிக்கி அடிமைகளாக கிடக்கும் மக்களை எப்படி இந்த படத்தில் காப்பாற்றிட போகிறார் பிரபாஸ் என்பதுதான் கதையாக இருக்கும் என தெரிகிறது.

விஜய் பட டைட்டில்: கல்கி படத்தில் பிரபாஸுக்கு பைரவா என் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனம் மகா சிவராத்திரியை முன்னிட்டு அறிவித்துள்ளது. பைரவா என்பது சிவபெருமானுடைய அவதாரத்தில் ஒன்று. காலபைரவ என சிவபெருமானை பக்தர்கள் வணங்குவர். நடிகர் விஜய் நடித்த பைரவா படத்தின் டைட்டிலை பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு வைத்திருக்கிறாரே நாக அஸ்வின் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கல்கி கமல்ஹாசனா?: பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில் கல்கி எனும் கதாபாத்திரம் கமல்ஹாசன் கதாபாத்திரமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் தற்போது எழுப்பியுள்ளனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது. லண்டனில் சிறிது காலம் ஓய்வெடுத்து வந்த பிரபாஸ் என்றும் கல்கி படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.

பிரம்மாண்ட பிரபாஸ்: 500 கோடி பட்ஜெட்டுக்கு கம்மியாக படம் எடுப்பது என்றால் என் பக்கமே வராதீங்க என சொல்லிவிடுவார் போல பிரபாஸ் அடுத்து அவர் நடிக்கவுள்ள கமர்ஷியல் படமான ராஜாசாப் படமும் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபாஸ் நடிக்க காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X