Kamal birthday: நாங்க மட்டும் சும்மாவா... கமலின் பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்ட கல்கி 2898 AD டீம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக கொண்டாடப்படுபவர். அதற்கேற்ப சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாகவும் ரசிகர்கள் இவரை பார்த்து வருகின்றனர்.
களத்தூர் கண்ணம்மாவில் 4 வயது சிறுவனாக துவங்கிய கமல்ஹாசனின் பயணம் தற்போது இந்தியன் 2, KH233, KH234, கல்கி 2898 AD என தொடர்கிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பிவரும் கமல்ஹாசனின் தயாரிப்பில் தற்போது எஸ்கே21 படம் நிறைவு கட்டத்தில் உள்ளது. விரைவில் சிம்புவின் படமும் சூட்டிங் துவங்கவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாக பார்க்கப்படுபவர். உலகநாயகனாக ரசிகர்கள் இவரை சர்வதேச அளவில் கொண்டாடி வருகின்றனர். நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கும், இசை, பாடகர், பாடலாசிரியர், அரசியல், நிகழ்ச்சித் தொகுப்பு என பன்முகம் காட்டி வருகிறார். கமலை பொருத்தவரையில் Age is just a number என்ற வாசகம் உண்மையாக இருக்கிறது. இவரது வயது கூடக்கூட சினிமாவின் மீதான இவரது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
65 ஆண்டுகால திரைப்பயணம்: களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் 4 வயதில் தன்னுடைய நடிப்புப் பயணத்தை துவங்கிய கமல்ஹாசனின் திரைப்பயணம் இன்றைய தினம் அவரது 69வது வயதுவரை நீண்டு வருகிறது. கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமலுக்கு சிறப்பாக கைக்கொடுக்க, அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து கமிட்டாகி அறிவிப்பு மேற்கொண்டு வருகிறார்.
கல்கி 2898 AD படம்: நீண்ட மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தை தூசித்தட்டி தற்போது படத்தை முடித்துக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசுக்கு வில்லனாக பான் இந்தியான படமான கல்கி 2898 AD படத்திலும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து இந்த மாதத்திலேயே ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
அடுத்தடுத்த படங்களின் அறிமுக வீடியோக்கள்: தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் கமிட்டாகியுள்ள KH234 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. கமல் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிமுக வீடியோ, போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளது. கமல் பிறந்தநாளையொட்டி முன்னதாக இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியான நிலையில், இன்றைய தினம் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கல்கி 2898 AD டீம் வெளியிட்ட மிரட்டல் போஸ்டர்: கமல் பிறந்தநாளையொட்டி முன்னதாக அறிமுக வீடியோக்களை அடுத்தடுத்து இந்தியன் 2 டீம் மற்றும் Thug life டீம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது கமலின் பிறந்தநாளையொட்டி கல்கி 2898 டீமும் கமலின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. நிழல் உருவமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில் கமலின் லுக் மிரட்டலாக காணப்படுகிறது. முகத்தில் லேசான புன்னகையுடன் வில்லத்தனத்தை சேர்த்துள்ளார் கமல். இந்த போஸ்டரை தயாரிப்புத்தரப்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











