Kalki 2898 AD: 6000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த கதை.. கல்கி 2898 AD ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்!

சென்னை: நடிகர் பிரபாஸ் லீட் கேரக்டரில் நடித்துவரும் கல்கி 2898 AD படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருகிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் அதிகமான ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தினங்களில் அவர் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

முன்னதாக புராஜெக்ட் கே என்று இந்தப் படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த சூழலில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் டைட்டிலையும் படக்குழு சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே தற்போது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kalki 2898 AD movie team announced Release date including Actor Kamal haasan

கல்கி 2898 AD படம்: நடிகர் பிரபாஸ் லீட் கேரக்டரில் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். இவர் முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். முன்னதாக புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த கல்கி 2898 AD, படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ்: சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகிவருகிறது கல்கி 2898 AD. படத்தில் பிரபாசுக்கு வில்லனாக களமிறங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். சில தினங்களே அவர் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்த நிலையில், அவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

கல்கி 2898 AD பட ரிலீஸ் தேதி: படம் பல மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வரும் மே மாதம் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பை சென்னை, மதுரை, ஐதராபாத், வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் கல்கி 2898 AD படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் தற்போது பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளனர்.

ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்: இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 6000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த ஒரு கதை, மீண்டும் மே 9ம் தேதி 2024ல் துவங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ரிலீஸ் அப்டேட்டிற்கான புதிய போஸ்டரையும் அவர் இந்த போஸ்டுடன் இணைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை மேற்கொண்ட வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் அஸ்வினி தத், இந்தப் படம் தங்களுக்கு சிறப்பான தருணத்தை அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தங்களது நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்துடன் இந்தப் படம் இணைந்துள்ளதாகவும் தங்களது பயணத்தை இந்தப் படம் அர்த்தமுள்ளதாக ஆக்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X