Kalki 2898 AD: என்னது 9 பாகங்களா.. கல்கி 2898 AD டீமோட வேற லெவல் பிளான்!

சென்னை: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாபச்சன், திஷா பதானி, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து பட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் பிரபாஸ் ஒரு மாத காலம் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரபாஸுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார்,

நடிகை சாவித்ரியின் பயோ பிக்காக வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் கல்கி 2898 AD படத்தை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்ஷனாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ஸ் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Kalki 2898 AD movie to be planned for 9 parts as Pan world movie

கல்கி 2898 AD படம்: நடிகை சாவித்திரியின் பயோபிக்காக வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கி ஏராளமானோர் கவனத்தை பெற்றவர் இயக்குனர் நாக் அஸ்வின். அவரது இயக்கத்தில் அடுத்ததாக சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 AD. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் இந்தப் படம் மிகந்த கவனத்தை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

கமல்ஹாசனின் கேரக்டர் லுக்: கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது கேரக்டர் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் மே 9ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் பிரமோஷனை அடுத்தடுத்து படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்தில் ஆக்ஷனுக்கு குறைவில்லாமல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 9ம் தேதி ரிலீஸ்: சர்வதேச அளவில் வரும் 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் பிரபாஸ் ஒரு ஒரு மாத காலம் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது முந்தைய படங்கள் சொதப்பலாக அமைந்த நிலையில் இந்தப் படத்தை அவர் அதிகமாக நம்பியுள்ளார். படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு இந்த படத்தில் நடிப்பதற்காக 120 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

9 பாகங்களாக உருவாக்கம்: படத்தில் கமல்ஹாசன் சில நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனை ஒட்டி அடுத்தடுத்த செயல்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் ஒன்பது பாகங்களாக அடுத்தடுத்து உருவாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் நடிகர் கமல்ஹாசனுக்கு இரண்டாவது பாகத்தில் மிகவும் வெயிட்டான கேரக்டர் அமையவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X