வெளியானது கல்கி 2898 AD படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ்.. அமிதாப்புடன் மோதும் பிரபாஸ்.. அப்ப கமல்ஹாசன்?

சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கல்கி 2898 AD புதிய ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ட்ரெயிலரில் மிரட்டிய அதே கேரக்டர்களுடன் இந்த முறை ஷோபனா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். காசிதான் முதல் நகரம் காசிதான் கடைசி நகரம் என்ற வாசகத்துடன் ரசிகர்களை சந்தித்த படக்குழுவினர் தற்போது இந்த ரிலீஸ் ட்ரெயிலரில் மேலும் பல அதிரடிகளை சேர்த்துள்ளனர்.

Prabhas Kamal haasan Amitabh bachchan Nag ashwin Kalki 2898 AD movie tamil cinema

கல்கி 2898 ஏடி படம்: நடிகர் பிரபாஸ் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் படம் கல்கி 2898 AD, முன்னதாக அவரது நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மட்டுமே அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து பான் இந்தியா ஸ்டார் லெவலுக்கு உயர்த்தியது. இந்நிலையில் அடுததடுத்து சலார் உள்ளிட்ட படங்கள் எவையும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் வரும் 27ம் தேதி நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் இணைந்துள்ள கல்கி 2898 AD படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களையும் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தின.

ரிலீஸ் ட்ரெயிலர்: இந்நிலையில் தற்போது கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்தடுத்து இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை ரிலீசையொட்டி பல இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த ட்ரெயிலர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்த ட்ரெயிலரில் முந்தைய ட்ரெயிலரில் இல்லாத பல்வேறு விஷயங்களையும் படக்குழுவினர் சேர்த்துள்ளனர்.

சயின்ஸ் பிக்ஷன் கதை: சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுததடுத்த அப்டேட்கள், ட்ரெயிலர்கள் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. இந்நிலையில் மாலையே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த ட்ரெயிலர் மிகவும் தாமதமான 9 மணியளவில்தான் வெளியானது. இதனால் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆயினும் முதலில் தெலுங்கில் மட்டுமே வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மிகவும் பிரதானமான கேரக்டரில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளது இந்த ட்ரெயிலரில் தெரியவந்துள்ளது.

கமல் லுக்: இந்த ட்ரெயிலரிலும் கமல்ஹாசனின் லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த லுக்கிற்கு தானும் ஒரு காரணம் என்றும் தான் இந்த லுக்கிற்காக இயக்குநருடன் இணைந்து திட்டமிட்டதாகவும் முன்னதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முந்தைய கேரக்டர்களை இந்த லுக் எந்தவகையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய ரோலில் அமிதாப்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில், இதற்கான நேரம் வந்துவிட்டதாக அமிதாப் பச்சன் கூறுவதாக துவங்கியுள்ளது. கடவுளுக்குள் அனைத்தும் அடக்கம் என்று அனைவரும கூறும் நிலையில் கருவில் கடவுள் நிறைந்துள்ளதாகவும் அவர் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. இதையடுத்து தீபிகா படுகோன், அதிர்ச்சியுடன் எழும்புவதாகவும் காணப்பட்டது. பிரபாசுக்காக காத்திருக்கும் அமிதாப்பச்சன், அவருடன் சண்டையிடுவதாகவும் அதிரடியாக இந்த ட்ரெயிலரில் அமைந்துள்ளது. அவரது நெற்றியில் நெருப்புப் படலத்துடன் அவர் தொடர்ந்து காட்சிக் கொடுக்கிறார்.

அடுத்தடுத்த பிரம்மாண்டம்: தொடர்ந்து அடிமைப்பட்டிருக்கும் ஏராளமான மக்கள், இரு தரப்பினரிடையே நடக்கும் போர், என அடுத்தடுத்த பிரம்மாண்டங்களை இந்த ட்ரெயிலர் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ட்ரெயிலரில் அமிதாப் பச்சனுக்கு அதிகப்படியான காட்சிகள் காணப்படுகின்றன. அவரே பிரதானமான காட்சிகள் காட்டப்படுகிறார். இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களை எந்த வகையில் கட்டிப்போடும் என்று தெரிந்துக் கொள்ள அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X