நடிப்பில் மிரட்டினாரா பிரபாஸ்? காலில் விழப்போன அமிதாப் பச்சன்.. கல்கி படப்பிடிப்பில் நடந்தது என்ன?
மும்பை: இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக கல்கி 2898 ஏ.டி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 10ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் இந்திய சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது.
படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பல இந்திய திரைப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பைரவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வில்லன் கமல்: படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ட்ரைலரிலும் கமல்ஹாசன் ஒரு டயலாக் பேசும் விதமாக காட்டப்பட்டிருந்தது. நெற்றிக்கண்ணோடு உலகநாயகன் கமல்ஹாசன் இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கல்கி 2898 ஏ.டி படம் வெளியாகி இரண்டு வாரங்களில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளது. மேலும் கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் 19 நிமிடங்கள் வருகின்றார் என்றும், இரண்டாம் பாகத்தில் ஒன்றரை மணி நேரம் வருகின்றார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

ப்ரீ ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று அதாவது ஜூன் 19ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார். அப்பொது பிரபாஸிடம் அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு பிரபாஸ் பதில் அளிப்பதற்கு முன்னர் குறுக்கிட்ட நடிகர் அமிதாப் பச்சன், நீ உனது கால்களைத் தொடவிடவில்லை என்பதை கூறு" என கிண்டலாகக் கூறினார்.

பிரபாஸ் காலில் விழப்போன அமிதாப்: அதன் பின்னர் பேசத் தொடங்கிய பிரபாஸ், " நான் அமிதாப் பச்சன் சாரைப் பார்த்ததும் அவரது கால்களில் விழப்போனேன். உடனே அவர் நீ எனது கால்களில் விழுந்தால் நானும் விழுவேன் என்றார். ஆனால் அவர் என் கால்களில் விழுவதற்கு நான் விடவேயில்லை. எனது சிறுவயதில் எனது மாமாக்களும் சித்தப்பாக்களும் உங்களைப் போல் ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார்கள். இந்தியா முழுவதும் அனைத்து திசைகளிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று சேர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். யாராவது நன்கு உயரமாக இருந்தால், ஆள் பார்ப்பதற்கு அமிதாப் பச்சன் மாதிரி இருக்காரே என கூறுவார்கள். அந்த அளவிற்கு நீங்கள் இந்தியா முழுவதும் பிரபலம் உங்களோடு நடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.

கமல்ஹாசன்: அதேபோல் கமல்ஹாசன் சாரின் சாகர் படத்தைப் பார்த்துவிட்டு அந்தப் படத்தில் அவர் என்ன உடை அணிந்திருந்தாரோ அதே மாதிரி உடை வாங்கி நான் அணிந்து எனது அம்மாவிடம் காட்டியிருக்கின்றேன். வயிறு நன்கு பெரிதாக தெரியவேண்டும் என்பதற்காக துணிகளை வைத்து வயிறு பெரிதானது மாதிரி நான் காட்டியிருக்கின்றேன்" இவ்வாறு கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











