பாப்பா போட்டோவை வெளியிட்ட, தாலிகட்டாமல் குழந்தை பெற்ற நடிகை... என்ன பெயர் வச்சிருக்கார் பாருங்க!

By

மும்பை: தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்த நடிகை, தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்ச் பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து

விவாகரத்து

பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ள கல்கி, தனக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இவர், இப்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள வெப்சீரிஸில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார் நடிகை கல்கி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கர்ப்பமானார் கல்கி.

பெண்குழந்தை

பெண்குழந்தை

தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசியிருந்த கல்கி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பமான நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றைக் காண்பித்தபடி தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

Recommended Video

எமி ஜாக்ஸன் போல திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியான அஜித் பட நடிகை கல்கி கொச்லின்!-Kalki Koechlin

டாக்டருக்கு நன்றி

இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்களில் கோவாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களும் அவருடன் உள்ளனர். குழந்தையை சிறப்பாக பெற்றெடுக்க உதவிய அவர்களுக்கு கல்கி நன்றி தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ஷபோ (Sappho) என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X