கண்ணுறங்குப் பொன்மணி.. குழந்தையை தூங்க வைக்க பிரபல நடிகை வேற ஸ்டைல் தாலாட்டு.. குவியும் பாராட்டு!

By

மும்பை: நடிகை கல்கி கோச்சலினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் கல்கி கோச்சலின். அவர் பெற்றோர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவரும் பிரபல இந்தி பட இயக்குனர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அனுராக்கிற்கு இது இரண்டாவது திருமணம்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ள கல்கி, தனக்குத் தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

நீக்கி விட்டார்

நீக்கி விட்டார்

அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களிலும் சில பிரச்னையை சந்தித்தேன். என்னை தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார். மறுத்ததால் அவர் படத்தில் இருந்து நீக்கி விட்டார் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது.

கர்ப்பமானார்

கர்ப்பமானார்

இவர், இப்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள வெப்சீரிஸில் நடித்துள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார் நடிகை கல்கி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கர்ப்பமான கல்கி, தாய்மை அடைந்திருப்பதைப் பற்றி உருக்கமாக இன்ஸ்டாவில் பேசிவந்தார். அவருக்கு பிப்ரவரி மாதம் பெண் குழந்தைப் பிறந்தது.

தமிழில் தாலாட்டு

தமிழில் தாலாட்டு

குழந்தைக்கு சப்போ என்று பெயர் வைத்துள்ளனர். இப்போது லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை கல்கி கோச்சலின், தனது மகளைத் தூங்க வைக்க, தமிழில் தாலாட்டு பாடலை பாடியுள்ளார். கிதார் இசைத்தப்படி அவர் பாடும், கனி கண்மணி கண்ணுறங்கு பொன்மணி என்ற பாடல் ரசனையாக இருக்கிறது. பாடலை கேட்டபடி குழந்தை அங்கும் இங்கும் பார்க்கிறது. குழந்தையை தூங்க வைக்க இந்த தாலாட்டு சிறப்பானது என்று கூறியுள்ளார்.

தமிழில் பாடுவது

தமிழில் பாடுவது

இதையடுத்து பலர் அவரது பாடலைப் பாராட்டியுள்ளனர். அனுராக் காஷ்யபின் மகள் ஆலியா, இது இனிமையாக இருக்கிறது. எனக்கே தூக்கம் வருகிறது என்று கூறியுள்ளார். சிலர் நீங்கள் தமிழில் பாடுவது அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். ஒருவர் துரதிர்ஷ்டவசமாக பாடல் வார்த்தை சரியாகக் கேட்கவில்லை, ஆனால், இசை ரசிக்கும்படி இருக்கிறது என்று ஒருவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X