அடுத்த ஆண்டு துவங்கும் கல்கி 2 சூட்டிங்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் பிரபாஸ் கேரியரில் தி பெஸ்ட் படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது கல்கி 2898 ஏடி படம். பிரபாசுடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்து மிரட்டலான அனுபவத்தை கொடுத்திருந்தனர். குறிப்பாக அமிதாப்பச்சன் மாஸ் கிளப்பியிருந்தார்.
கல்கி படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. முதல் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களுக்கு சிறப்பான திரில்லிங் அனுபவத்தை கொடுத்திருந்த நிலையில் 2வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதீதமாக காணப்படுகிறது.

கல்கி 2898 ஏடி படம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்து சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது கல்கி 2898 ஏடி படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவே செய்தது. இதனால் படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.
கல்கி 2 சூட்டிங் அப்டேட்: கல்கி 2898 ஏடி படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருந்தது. படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனத்துடன் செய்திருந்தார் நாக் அஸ்வின். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாக உள்ளதாக முன்னதாகவே இந்த படம் குறித்து படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக தயாரிப்புத்தரப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் நடக்கும் சூட்டிங்: இந்நிலையில் கல்கி 2 படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமான வகையில் படம் உருவாக உள்ளதாகவும் படம் 2028ம் ஆண்டில் தான் ரிலீசாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் அறிவித்துள்ளார். முன்னதாக கல்கி 2898 ஏடி படமே ரசிகர்களின் பொறுமையை சோதித்து நீண்ட காலங்கள் கழித்தே ரிலீசானது. இந்நிலையில் இரண்டாவது பாகத்திற்கு நாம் இன்னமும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும் அதே நேரத்தில் சோர்விக்கும் உட்படுத்தியுள்ளது.

கல்கி தயாரிப்பாளர் அப்டேட்: ஆனால் காற்றாக பறக்கும் காலத்தை கவனத்தில் கொண்டால் இந்த படம் மிகச் சிறப்பான அனுபவத்தை தரும் பட்சத்தில் இந்த நான்கு ஆண்டுகள் என்பது ரசிகர்களை ஜஸ்ட் லைக் தட் என கடக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, கல்கி 2 படம் முதல் பாகத்தை காட்டிலும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாக அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











