'ரேம்ப்'புகளை கலக்க வரும் புது 'மியாவ்'....கல்பனா மாள்வியா!
மும்பை: சர்வதேச ரேம்ப் வாக் போன்றவற்றில் இனி இன்னொரு கலக்கல் இந்திய முகத்தையும் பார்க்கலாம்.. அவர்தான் கல்பனா மாள்வியா.
காத்ரீனா கைப், பரிடா பின்டோ, சுஷ்மிதா சென்ற அழகுப் பூனைகளின் கேட் வாக்குகளைப் பார்த்து சலித்த கண்களுக்கு கல்பனா ஒரு காவியமாக இனி தெரிவார்.
சர்வசே அளவிலான மாடல்கள் பட்டியலில் இந்தியப் பெண்களுக்கும் தனி இடம் உண்டு. இந்தியப் பெண்களின் இயல்பான அழகு, எழில் நடைக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த வரிசையில் சேரப் போகிறார் கல்பனா மாள்வியா.

அமெரிக்காவில் அசத்தப் போகும் கல்பனா
கல்பனா மாள்வியா ஒரு நடிகையும் ஆவார். விரைவில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒரு கேட் வாக்கில் கலந்து கொள்ளப் போகிறது இந்த அழகுப் பூனை.

நடிகைப் பூனைகளில் கல்பனாவும்
நடிகைகளாக இருந்து கொண்டே கேட் வாக்கும் போடும் அழகு நடிகைப் பூனைகள் வரிசையில் கல்பனாவும் இதன் மூலம் இணைகிறார்.

அமெரிக்க ஏஜென்சியுடன் ஒப்பந்தம்
இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மாடலிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கல்பனா.

அருமையான அனுபவம்
அமெரிக்காவில் போய் பூனை நடை போடுவது அருமையான அனுபவமாக இருக்கும். தூங்காத நகரத்தில் என் பூனை நடை இடம் பெறப் போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அழகா நடந்துட்டு வாங்க மியாவ்....!


Click it and Unblock the Notifications











