twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலை கற்பிக்கும் கல்தா.. பட் மக்களிடம் சரியா போய்ச் சேரணுமே!

    |

    சென்னை : கல்தா திரைப்படம் சரியான அரசியலை கற்பிக்கும் படம் இது மக்களிடம் சென்று சேர வேண்டும் .

    மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல் படமாக "கல்தா" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் அரசியல் வாதிகளையும் தற்சமய அரசியலையும் விமர்சித்து எடுக்கபட்டிருக்கும் படமாகும். இந்த படத்தில் சிவ நிஷாந்த் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருடன் ஆன்டனி சகாயராஜ், சகா நடிகை ஐரா, அப்புக்குட்டி, டைகர் தங்கதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .

    “Kaltha“ is a film with deals about the Good politics.

    இந்த படத்தின் விளம்பரங்கள் கடந்த சில வாரங்களாக வெகு விமர்சியாக நடைப்பெற்று வந்தது. பல கல்லூரி விழாக்களில் கலந்து கொண்ட படக்குழு மாணவர்களிடம் படத்தை பற்றிய பல விசயங்களை பகிர்ந்து வந்தனர். இதை பற்றி படக்குழு பேட்டிகளில் கூறுகையில் படம் சரியான அரசியலை பேசியிருக்கிறது இது மக்களிடம் சென்று சேர வேண்டும் இதனால் தான் இவ்வளவு ப்ரோமோஷன் செய்தோம் என்றார்கள்.

    “Kaltha“ is a film with deals about the Good politics.

    இந்த படம் ஒரு ஊரை பற்றிய கதையாக எடுக்கபட்டிருக்கிறது. ஒரு ஊர் சந்திக்கும் பிரதான பிரச்சனைகளையும் அதை எதிர்த்து போராடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது . இந்த படத்தின் நாயகனாக சிவ நிஷாந்த் மற்றும் நாயகியாக ஐரா நடித்து உள்ளனர். இவர்கள் படத்தில் காதல் ஜோடியாக நடித்திருந்தாலும் கூட. படத்தில் காதல் காட்சிகள் மிக குறைவு தான். ஏனெனில் படத்தில் அதிக படியான காட்சிகள் அரசியலையே பேசியிருக்கும் காரணத்தினால் காதல் காட்சிகளை குறைத்தே எடுத்திருக்கிறதாம் படக்குழு.

    மேலும் இந்த படத்தின் விளம்பரங்களின் போது பேசிய ஐரா நான் முழுவதுமாக கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்பவில்லை நல்ல கதை களம் கொண்ட படங்களையே எதிர்பார்கிறேன் எனக்கூறினார் .

    இந்த படத்திற்காக 6 நாட்களில் 3 பாடல்களுக்கு ஆடி இருக்கிறேன். இரவு பகலாக ஆடியது இதுதான் முதல்முறை என்றும் கூறினார் ஐரா. மேலும், பாடலின் போது பல காயங்கள் ஏற்பட்டதாகவும், இருந்தும் சிறந்த படத்தை கொடுக்க படக்குழு முயற்சிக்கும் போது அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் தாங்கி கொண்டு என்னுடைய உழைப்பை படத்தில் போட்டிருப்பதாக ஐரா கூறினார்.

    English summary
    “Kaltha“ is a film with deals about the Good politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X