Theatre release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், மலையாளத் திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழகத்தில் வசூலை அள்ளியது.அந்த படத்திற்கு செக் வைக்கும் வகையில் கடந்த வாரம் பிரித்விராஜ், அமலா பால் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில், இந்த வாரம் என்னனென்ன திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ள என்பதை இப்போது பார்க்கலாம்.

பேமிலி ஸ்டார்: கீதா கோவிந்தம், சர்காரு வாரி பாட்டா படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் பேமிலி ஸ்டார். இதில், மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ரொமான்டிக் ஃபேமிலி ஜனரில் உருவாகி உள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் அதாவது ஏப்ரல் 5ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kalvan Family star and White Rose this week theatre release Movies

டபுள் டக்கர்: தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள பேன்டசி ஆக்ஷன் திரைப்படம் தான் டபுள் டக்கர். மீரா மஹதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசாகர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Kalvan Family star and White Rose this week theatre release Movies

கள்வன்: தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் தற்போது நடிகராக மாறி அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் என்னத்தான் ஹீரோவாக நடித்தாலும், தங்கலான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ரெபல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இவர் நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. கள்வன் படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

Kalvan Family star and White Rose this week theatre release Movies

இரவின் கண்கள்: இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் திரைப்படம் தான் இரவின் கண்கள். இப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில், பாப் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Kalvan Family star and White Rose this week theatre release Movies

ஒயிட் ரோஸ்: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ஒயிட் ரோஸ் திரைப்படம் ஏப்ரல் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி சண்டிவீரன், திரிஷா இல்லைன்னா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ரூபாய், மன்னர் வகையறா, ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Kalvan Family star and White Rose this week theatre release Movies

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X