Neha Gowda: 8 ஆண்டுக்கு பின் தாயான சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து!

சென்னை: கல்யாண பரிசு சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு இணைவாசிகள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் 2013ம்ஆண்டு கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ​​'லட்சுமி பாரம்மா' என்ற சீரியல் மூலம் பிரபலமானார். அந்த சீரியலில் இவர்,ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'சுவாதி சினுகுலு' என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்.இந்த சீரியலின் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து, கல்யாண பரிசு, ரோஜா,மற்றும் பாவம் கணேசன் போன்ற தமிழ் சீரியலில் நடித்தார். இந்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் என்பதால், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

neha gowda kalyana parisu girl baby

சீரியல் நடிகை நேஹா: நேஹா மற்றும் சாந்தன் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிச்சயத்தை யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த இவர்கள் திடீரென நிச்சயமான போட்டோவை ஷேர் செய்து திருமண தேதியை அறிவித்தனர். இதையடுத்து 2017ம் ஆண்டு இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் பலர் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹேகா சின்னத்திரையில் நடித்து வந்தார்.

neha gowda kalyana parisu girl baby

8 வருடத்திற்கு பிறகு: இந்லையில், நடிகை நேஹா ராமகிருஷ்ணன் அம்மாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, தனது கணவர் சந்தன் கவுடாவுடன் எடுத்துக்கொண்ட கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் நேஹா - சந்தன் கௌடா தம்பதியர், பாரம்பரிய உடையில் அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

neha gowda kalyana parisu girl baby

அம்மாவானார்: இதையடுத்து நேஹா ராமகிருஷ்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வளைகாப்பு நடைபெற்றது.தடபுடலாக நடந்த வளைகாப்பில் சின்னத்திரை நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, தற்போது நேஹா ராமகிருஷ்ணனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நேஹா ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அப்பா, அம்மாவாகி உள்ள நேஹா ராமகிருஷ்ணன் மற்றும் சந்தன் கவுடாவுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

neha gowda kalyana parisu girl baby

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X