இன்டர்நெட் திருமண ஏற்பாடு கலாட்டாக்களை வைத்து உருவாகும் கல்யாண சமையல் சாதம்!

By Shankar

நடிகர் பிரசன்னா லேகா வாஷிங்க்டன் நடிப்பில் தயாராகி வரும் 'கல்யாண சமையல் சாதம்' விறுவிறுப்பாய் தயாராகி வருகிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர் - இயக்குனர் கூட்டணி ஆனந்த் கோவிந்தன் - அருண் வைத்யநாதன் தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.

இன்டர்நெட் திருமணங்கள்

இன்டர்நெட் திருமணங்கள்

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், இணையத்தின் மூலம் தேடப்படும் வரன்கள், திருமண ஏற்பாடுகளில் நடக்கும் கலாட்டாக்கள் என்று சுவை ததும்பும் காட்சிகளோடு, இக்கால இளைஞர்களை வசீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர்எஸ் பிரசன்னா

இயக்குநர் ஆர்எஸ் பிரசன்னா

இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா, எல்.வி. பிரசாத் அகாடெமியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் சிகரம் பாலசந்தரிடம் தங்க விருது பெற்றவர். திருமணத்துக்குப் பிறகு நடிகர் பிரசன்னா ஹீரோவாக நடிக்கும் படம் இது.

ஆரோ 3 டி

ஆரோ 3 டி

இவரது குறும்படங்களின் மூலம் பெர்லின் மற்றும் பூசன் (கொரியா) திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளார். விஸ்வரூபத்தில் ஆரோ 3டி எனும் புதிய தொழில் நுட்பத்தில் ஒலிச்சேர்க்கை செய்த குணால் ராஜன், கல்யாண சமையல் சாதத்தை அமெரிக்காவின் புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் ஒலிச்சேர்க்கை செய்ய உள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

அல்போன்ஸ் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல இந்தி 3டி படங்களில் பணியாற்றிய கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சத்யராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஆறுச்சாமி கலையைக் கையாள்கிறார்.

அரோரா

அரோரா

இத்திரைப்படத்தில் அரோரா எனும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். இவர் பல புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும், உலக இசை விழாக்களிலும் புல்லாங்குழல் வாசித்து பலரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவராவார்.

மெல்ல சிரித்தாய்... சிங்கிள் ட்ராக்...

மெல்ல சிரித்தாய்... சிங்கிள் ட்ராக்...

ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் இருந்து, 'மெல்ல சிரித்தாய்' எனும் ஒரு பாடலை மட்டும் வரும் வெள்ளி மே 24 வெளியிடப்பட இருக்கிறது. பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல வெற்றிப் படங்களின் பாடல்களை வாங்கிய திங்க் மியூசிக் நிறுவனம் கல்யாண சமையல் சாதத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X