தமிழ் படத்தில் நடிக்கும் 'கல்யாணம் முதல் காதல் வரை' புகழ் ப்ரியா பவானி சங்கர்
சென்னை: கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி திடீர் என சீரியலில் இருந்து விலகினார்.

ரசிகர்கள்
தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாக கூறினார் ப்ரியா. திருமணம் செய்தால் என்ன தொடர்ந்து நடிங்க ப்ளீஸ் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

படம்
டிவி சீரியலில் ப்ரியா தொடர்ந்து நடிக்க மாட்டாரா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ப்ரியா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ப்ரியா
ப்ரியா எந்த படத்தில் யாருடன் நடிக்க உள்ளார் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பிரபலம்
டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











