அடப்பாவிகளா..குறும்படத்தையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ் !
சென்னை : உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சென்று கொண்டே இருப்பது ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு விதத்தில் பாதகமாக சென்று முடிகிறது.
வீட்டில் ஒரு டெலிபோன் இருந்த காலம் போய் தற்போது ஒவ்வொருவரின் கைகளிலும் பல ஆயிரம் கணக்கான விலை மதிப்புள்ள ஸ்மார்ட் போன்கள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சூழலில் திரைப்பட துறை பைரஸியினால் உலகம் முழுவதும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னிலையில் இந்திய திரைப்படத் துறையை மிகவும் அச்சுறுத்தி வரும் பைரஸி வலைத்தளங்கள் இதுவரை திரைப்படங்களை மட்டுமே திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்து வந்த நிலையில் தற்பொழுது குறும்படங்களையும் விட்டு வைக்கவில்லை.

பல ஸ்மார்ட்போன்கள்
முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு லேண்ட் லைன் தொலைபேசி இருக்க, தற்பொழுது தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைவரின் கைகளிலும் பல ஆயிரக்கணக்கான விலைமதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் விதவிதமான கலர்களில் விதவிதமான டிசைன்களில் துள்ளி குதித்து வருகின்றன.

விலையும் மிக சொற்பமாக
இவ்வாறு இருக்கையில் இணையதள வசதிகளும் பெரும்பான்மையான வீடுகளில் மிக இயல்பாகவே கிடைக்கத் தொடங்கிவிட்டது. மேலும் இணைய சேவையின் விலையும் தற்போது மிக சொற்பமாக இருப்பதால் அனைவரும் இதை எளிதாக இதை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

திரைப்படத் துறை பாதித்துள்ளது
இவ்வாறு சில நன்மைகள் இருப்பினும் இணையதளத்தில் நடக்கின்ற பைரஸி என்ற நவீன திருட்டால் உலகில் பல நாடுகளின் திரைப்படத் துறையும் கடுமையாக பாதித்துள்ளது. தற்போதுள்ள அதி நவீன காலத்தில் பைரஸி வலைத்தளங்கள் படங்கள் வெளியான ஓரிரு நாட்களிலேயே அதை ரகசியமாக படம் பிடித்தும் அல்லது திருடியும் தங்களது வலைத்தளங்கள் மூலம் பதிவேற்றம் செய்து விடுவதால் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே
இந்திய சினிமா துறையில் ஆன்லைன் பைரஸி வெட்டவெளிச்சமாக பல வலைத்தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே அல்லது வெளியான ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்து தங்களது வலைதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்த்து தயாரிப்பாளர்களை பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கி விடுகின்றனர்.

புது படங்கள் வெளியாகாததால்
இந்த நிலையில் இந்தியாவில் திரைப்படங்களை மட்டுமே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட பல பைரஸி வெப்சைட்கள் பதிவேற்றம் செய்துவந்த நிலையில், சமீபகாலமாக லாக்டவுன் காரணத்தால் பல புது படங்கள் இன்னும் வெளியாகாததால் இந்த பைரஸி வெப்சைட்டுகள் பதிவேற்றம் செய்ய படங்கள் இல்லாமல் வேறு வழியில்லாமல் குறும்படங்களையும் திருடி தங்களது வெப்சைட்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

கலகலப்பான காமெடி காட்சிகள்
அந்த வகையில் தமிழில் சமீபத்தில் வெளியான கல்யாணராமன் குறும்படம் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் கலகலப்பான காமெடி காட்சிகளுடன் பார்க்கும் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து மிகச் சிறந்த படமாக அனைவராலும் பாராட்டப்பட்டு வெளியாகியது.

மிகுந்த பாதுகாப்புடன்
இந்த கல்யாணராமன் குறும்படத்தை பாடி பாஸ்கர், டிஜிகா உள்ளிட்ட தனித்துவமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மீரா மகதி இந்தக் குறும்படத்தையும் இயக்கியுள்ளார் மேலும் மரிய ஜெரால்டு இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர்களாக மைம் கோபி, அஞ்சலி ராவ், ஆர்எஸ் சிவாஜி, பாலாஜி சிவமணி என பல நடிகர்கள் நடுத்துள்ள இந்த குறும்படம் சில நாட்களுக்கு முன்பு தனியார் அப்ளிகேஷனில் மிகுந்த பாதுகாப்புடன் வெளியானது.

டவுன்லோட் செய்ய
இவ்வாறு பாதுகாப்புடன் வெளியான கல்யாணராமன் குறும்படத்தை ஆன்லைனில் பார்க்க மட்டுமே முடியும் என்ற நிலையில் டவுன்லோட் செய்ய பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு 10 செகண்ட் என்ற வீதத்தில் மட்டுமே ஒவ்வொரு முறையும் டவுன்லோட் செய்ய முடியும் என கடினமான கட்டுப்பாடுகளுடன் அந்த தனியார் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தனது தந்திரமான திருட்டுப் புத்தியின் மூலம் கல்யாணராமன் குறும்படத்தையும் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அடப்பாவிகளா குறும்படத்தை கூடவா
இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்ட கல்யாணராமன் குறும்படம் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ள அதே சமயத்தில் "அடப்பாவிகளா தியேட்டர்ல புது படம் எதுவும் ரிலீஸ் ஆகலேன்னு எங்க குறும்படத்தை கூட விட்டு வைக்காம திருடி அப்லோட் பண்ணிட்டீங்களேடா" என தங்களது ஆதங்கத்தை இவ்வாறு வேடிக்கையாக வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











