இவர்தான் என்னோட புது நண்பர்... இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய கல்யாணி பிரியதர்ஷன்!
சென்னை : நடிகர் மோகன்லால் நடிப்பில் சரித்திரப் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் மரக்கார் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.
தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ மூலம் அறிமுகமான இவர் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் வெளியே சென்று யாரையும் சந்திக்க முடியாது என்பதால் தன்னுடைய புது நண்பரை சமூகவலைதள பக்கத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.

மாநாடு
சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டுக் கொண்டே இருக்க இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார்.

சரித்திரப் பின்னணியை
தமிழில் ஹீரோ மூலம் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன் அதைத்தொடர்ந்து புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு தற்போது மாநாடு கைவசம் உள்ளது. மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் மோகன்லால் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக சரித்திரப் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் மரக்கார் திரைப்படத்தில் நடிக்கிறார்.

மோகன்லாலின் மகன்
தற்போதைக்கு கவர்ச்சிக்கு முற்றிலும் தடை விதித்து குடும்பப் பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்து வரும் கல்யாணி இவர் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ஹரிதாரம் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

செம்பருத்தி செடி
நாடு முழுவதும் கொரோனா சூழல் காரணமாக பொது முடக்கம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே வெளியில் எங்கும் செல்ல முடியாமல் இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது என்னுடைய புதிய நண்பரை சமூகவலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கல்யாணிக்கு பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த லாக்டவுன் சமயத்தில் தான் வளர்த்து வந்த செம்பருத்தி செடி இப்பொழுது பூ வைத்துள்ளது. எனவே தற்போதைக்கு இந்த செம்பருத்திப்பூ தான் தன்னுடைய புதிய நண்பர் பழைய நண்பர்களை வெளியில் சென்று காண முடியாது. என அதில் பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











