SK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி.
இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி நடிகையாகியுள்ளார். அவர் தல 59 படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார் கல்யாணி.
இந்த படம் மூலம் கல்யாணி கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
கல்யாணி
எஸ்.கே. 15 படத்தின் ஹீரோயினாக கல்யாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது 24 ஏஎம் ஸ்டுடியோஸ்.
கோலிவுட்
ஒரே நேரத்தில் தன்னுடைய இத்தனை ஆசைகள் நிறைவடைந்ததை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் கல்யாணி. இதை விட கோலிவுட்டில் சிறந்த அறிமுகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார் அவர்.

லிசி
கல்யாணியின் அம்மா லிசி ஒரு காலத்தில் கோலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தார். அவர் வழியில் கல்யாணியும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள்
சிவகார்த்திகேயன், கல்யாணி புது ஜோடி பார்க்க நன்றாக இருக்கிறது என்கிறார்கள் சிவாவின் ரசிகர்கள். புதுமுகம் கார்த்திக் துல்கர் சல்மானை வைத்து இயக்கும் வான் படத்திலும் நடிக்கிறார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











