சிவகார்த்திகேயன், சிம்பு: டாப் கியரில் செல்லும் கல்யாணி ப்ரியதர்ஷன்
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.
பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகளான கல்யாணி தாய் வழியில் நடிகையாகியுள்ளார். தெலுங்கில் அறிமுகமான வேகத்தில் பிசியான நடிகையாகிவிட்டார்.
இந்நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடி கல்யாணி தான்.

சிம்பு
ஹீரோ படம் மூலம் கோலிவுட் வந்துள்ள கல்யாணிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்யாணி
மாநாடு படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கல்யாணி தெரிவித்துள்ளார். மாநாடு குறித்த அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பர் என்று கூறி அவர்களே ஒரு புகைப்படத்தை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

துல்கர் சல்மான்
கல்யாணி துல்கர் சல்மானுடன் சேர்ந்து வான் படத்தில் நடிக்கிறார். தமிழில் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.

வீண் பேச்சு
நான் அந்த நடிகையின் இடத்தை பிடித்துக் காட்டுகிறேன், அவரை காலி செய்கிறேன் என்று வீராப்பு பேசிய வாரிசு நடிகையின் மார்க்கெட் டல் அடித்துள்ளது. இந்த நேரத்தில் கல்யாணி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். யாரையும் விரட்டிக் காட்டுகிறேன் என்று அவர் கூறவில்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











