மோகன்லால் மகன் நடிக்கும் ஹ்ருதயம்... அழகான டீசர் வெளியீடு!

சென்னை : மோகன்லால் மகன் ப்ரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹ்ருதயம்.

கல்லூரி காலக்கட்டத்தில் இருந்து திருமண வாழ்க்கை வரை தொடரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை சொல்லும் வகையில் இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் அழகான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் மலையாள திரைப்படத்துறையின் முக்கிய ஹீரோவாக உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மரக்கார் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன்.

மரக்கார் படம்

மரக்கார் படம்

இந்த படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ப்ரணவ் மோகன்லால்

நடிகர் ப்ரணவ் மோகன்லால்

மலையாளத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ஹ்ருதயம். படத்தில் ஒரு இளைஞனின் கல்லூரி முதல் திருமணம் வரையான நிகழ்வுகள் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளன.

ஹ்ருதயம் பட டீசர்

ஹ்ருதயம் பட டீசர்

படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஷேர் செய்துள்ளார்.

சிறப்பான காட்சிகள்

சிறப்பான காட்சிகள்

மேலும் தங்களுடைய இதயத்தை கொட்டி இந்த படம் உருவாகியுள்ளதாகவும் டீசர் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் காதலியாக தர்ஷனாவும் மனைவியாக கல்யாணியும் நடித்துள்ளனர். இதையொட்டி டீசரில் வெளியாகிவுள்ள காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

சிறப்பான வரவு

சிறப்பான வரவு

ஆதி என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் ப்ரணவ். தற்போது ஹ்ருதயம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் குழந்தை நட்சத்திரமாகவும் இவர் நடித்துள்ளார். பாபநாசம், லைப் ஆப் ஜோசுட்டி போன்ற படங்களில் ஜீத்து ஜோசப்பிடம் இவர் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். மலையாளத்தின் சிறப்பான வரவாக இவர் பார்க்கப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X