பட வாய்ப்புக்காக.. அந்தச் சம்பவத்தை நானும் எதிர்கொண்டேன்.. பிரபல நடிகை சொல்லும் மீ டு ஸ்டோரி!

By

சென்னை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சம்பவத்தை தானும் எதிர்கொண்டேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவின் 'அள்ளித்தந்த வானம்' குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தார்.

பின்னர் பல படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், வளர்ந்ததும் தனது பெயரை பூர்ணிமா என்று மாற்றிக் கொண்டு ஹீரோயினாக நடித்தார்.

சின்னத்திரை தொடர்

சின்னத்திரை தொடர்

சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பின்னர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார். அடுத்து `பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகை ஆனார். அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் உட்பட பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தார்.

பெங்களூரில் செட்டில்

பெங்களூரில் செட்டில்

பின்னர் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமாவில் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் தானும் அதை எதிர்கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

சிறிய வயதிலேயே 'அள்ளித்தந்த வானம்' படத்தில் நடித்தேன். நான் நாயகியாக உயர்ந்த பிறகு எனக்குப் பெரிய ஹீரோ படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீ டூ சம்பவம் பற்றி கேட்கிறீர்கள். அது எனக்கும் நடந்திருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும்போது, பட வாய்ப்புக்காக எனது அம்மாவுக்கு போன் அழைப்பு வரும்.

அட்ஜஸ்ட்மென்ட்

அட்ஜஸ்ட்மென்ட்

பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் மகள்தான் ஹீரோயின். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அம்மா வேண்டாம் என்று போனை வைத்து விடுவார். பிறகுதான் அதன் அர்த்தம் என்ன என்று தெரிய வந்தது. படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

புரியவில்லை

புரியவில்லை

சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு அதிகரியாக இருந்தவர், ஒருமுறை இரவில் என்னை பப்பு-க்கு வருமாறு அழைத்தார். என்னை ஏன் அங்கு அழைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. பிறகு, நான் ‘காப்பி ஷாப்'பில் மாலையில் சந்திக்கலாமே என்றேன். பிறகு அந்த சேனலில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X