கேவலமா படம் எடுத்திருக்கார்...ராஜமெளலியை ஜெயில்ல போடுங்க...ட்வீட் போட்ட பிரபல நடிகர்
மும்பை : ஆர்ஆர்ஆர் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை எடுத்ததற்காக ராஜமெளலியை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் மிக கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆர்ஆர்ஆர் படம் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 550 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இயக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

260 வசூலித்த ஆர்ஆர்ஆர்
ரிலீசான முதல் நாளிலேயே பல படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆர்ஆர்ஆர் படம். உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 260 கோடிகளை வசூலித்துள்ளது. ஆர்ஆர்ஆர் ரிலீசை தெலுங்கு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். பிரபலங்கள் பலர் இந்த படத்தை பார்த்து விட்டு படத்தையும், ராஜமெளலியையும் பாராட்டி சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ராஜமெளலியை ஜெயில்ல போடுங்க
இந்நிலையில் பிரபல இந்தி நடிகரும் விமர்சகருமான கேஆர்கே எனும் கமால் கான், ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு மிக மோசமாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த படத்தை எடுத்தது தவறு என சொல்லமாட்டேன். மிகப் பெரிய குற்றம். 600 கோடி செலவில் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த டைரக்டர் ராஜமெளலிக்கு குறைந்தது 6 மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மோசமான படம்
கமால் கான் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான, கேவலமான படத்தை பார்த்ததில்லை. ராஜமெளலி சார், என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டீர்கள். என் அறிவு எல்லாம் இன்று பூஜ்ஜியமாகி விட்டது. இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிக மோசமான படம் என்றால் அது இது தான் என குறிப்பிட்டுள்ளார். கமால் கானின் இந்த பதிவு செம வைரலாகி வருகிறது.

அந்த ஊரு ப்ளூ சட்டை மாறனோ
ராஜமெளலியை மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர், தென்னிந்திய டைரக்டர்கள் என அனைவரையும் தொடர்ந்து மோசமாக விமர்சித்து வருகிறார் கமால் கான். இவரின் கருத்திற்கு பலரும் சோஷியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் அந்த ஊரு ப்ளூ சட்டை மாறன் போல என தமிழ் ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

நாட்டு நாட்டு பாடல் காப்பியா
ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் வார் படத்தின் காப்பி. அதில் உயரமாக இருக்கும் ஹிருத்திக் ரோஷனும் டைரக்டர் ஷெராஃப்பும் நன்றாக ஆடி இருப்பார்கள். அந்த பாட்டிற்கு 5 அடி உயரமுள்ள ராம் சரணும், ஜுனியர் என்டிஆரும் ஆடுவதை பார்க்கும் போது ஜோக்கர்களை போல் உள்ளனர். ராஜமெளலி ஃபர்ஹத் சம்ஜியை விட மோசமான டைரக்டர். தென்னிந்திய டைரக்டர்கள் தங்களின் குழந்தைகளை போன்ற நடிகர்களுடன் நடிக்க வைக்க வடக்கில் இருந்து அழகான நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் தங்கள் படங்களில் திறமையான வடஇந்திய ஹீரோக்களை நடிக்க வைப்பதில்லை. இது எப்படிப்பட்ட பாசாங்கு தனம் பாருங்கள் என்றும் கமால் கான் ட்வீட் செய்துள்ளார்.

நல்லவேளை தெலுங்கு தெரியாது
ஆர்ஆர்ஆர் படம் பற்றி நேர்மையாக விமர்சனம் செய்ததற்கு சோஷியல் மீடியாக்களில் பலரும் என்னை எதிர்த்து மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். நல்லவேளை எனக்கு தெலுங்கு தெரியாது. அதனால் அது பற்றி தனக்கு கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











