»   »  பணம் முக்கியமல்ல- கமல்

பணம் முக்கியமல்ல- கமல்

Subscribe to Oneindia Tamil

மாணவ சமுதாயம் நன்கு படித்து, கடுமையாக உழைத்து நாட்டுக்கு பெருமை தேடித் தர வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு தகவல் தொழில்நுட்பநிறுவனங்கள் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற்ற 347 மாணவ, மாணவியருக்கு வேலை நியமன உத்தரவுகளை வழங்கும்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு உத்தரவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பணத்தை விட கடின உழைப்பே கணக்கில் சேரும். உங்களது கடினமான உழைப்பு, சிறந்த படிப்பு, சீரியபங்களிப்பு ஆகியவற்றால் நாட்டுக்கு பெருமை தேடித் தர முனைய வேண்டும்.


தங்களது பிள்ளைகள், சாதனைகள் புரியும்போது பெற்றோர்களின் கண்களிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர் வருகிறதே,அதுதான் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி என்றார் கமல்ஹாசன்.

ஐபிஎம் இந்தியா நிறுவன பொது மேலாளர் ரவி நாராயணன், சத்யபாமா பல்கலைக்கழக நிறுவனர் ஜேப்பியார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.

காக்னிஸன்ட், டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ, போலாரிஸ், சீமன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இங்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்திஇந்த மாணவ, மாணவியரை தேர்வு செய்துள்ளன.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil