»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் வெற்றிப்பட நாயகன் கமல்ஹாசன்நடிக்கிறார். இது குறித்த புதிய தகவல்கள் வந்துள்ளன.

கமல்ஹாசனும் மணிரத்னமும் முதன் முதலில் இணைந்தது நாயகன் படத்தின்மூலம்தான். அந்த படம் திரையுலக்தை கலக்கு கலக்கியது.

பல மாறுபட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான கெட்டப்பில் கமல் நடித்துவந்தாலும் கமல் மீசையை எடுத்ததே கிடையாது. ஆனால் நாயகன் படத்தின்வித்தியாசமான கெட்டப்புக்காக கமல் தன் மீசையை துறந்தார்.

மணிரத்னம் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுக்கும் இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்தவர். நாயகனுக்கு பிறகு கமலும், மணியும் இணையவில்லை. நீண்டஇடைவெளிக்குப்பின் இப்போது இவர்கள்மீண்டும் இணையவிருப்பது தமிழ்திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தனது இந்தி திரைப்படமான அபய் திரைப்படத்தின் இறுதி கட்டபடப்பிடிபில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவரது முதுகு வலி காரணமாக அந்தபடப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டு வந்தது. அந்த படத்தை முடித்து மே மாதம்வெளியிட வேண்டும் என்பதற்காக சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் ஈடுபட்டுவருகிறார்கமல்ஹாசன்.

தான் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பது குறித்து கமல்ஹாசன் அளித்தபேட்டி:

நானும் மணியும் (மணிரத்னத்தை இப்படித்தான் அழைக்கிறார் கமல்) இணைந்துமீண்டும் ஒரு திரைப்படத்தை தரவிருக்கிறோம். கதை மற்ற விஷயங்கள் இன்னும்முடிவு செய்யப்படவில்லை.

எங்கள் இருவருக்கும் பிடித்தமான, பொருந்தக்கூடிய ஒரு கதையை மணி தேடிக்கொண்டிருக்கிறார்.அபய் திரைப்படம் முடிவுற்ற பின் மெளலி இயக்கும் நகைச்சுவைபடம் ஒன்றில் நடிக்கிறேன் அதன் பின் மணி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறேன்என்றார்.

மணிரத்னம் கூறுகையில், நானும், கமலும் இணைந்து பணிபுரியப் போகிறோம்.ஆனால் இது குறித்த பேச்சுவார்த்தை துவக்க நிலையிலேயே உள்ளது என்றார்.

மணிரத்னம்,அலைபாயுதே மூலம் தான் அறிமுகப்படுத்திய மாதவனை வைத்து ஒருபடம் இயக்குகிறார். அதன் பின் தான் கமல்ஹாசனும் அவரும் மீண்டும்இணைவார்கள்.

கமல்ஹாசன் நடித்து வரும் அபய் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில்இருந்தாலும், அந்த படத்தின் விநியோக உரிமை இது வரை யாருக்கும்வழங்கப்படவில்லை.

அந்த படத்தை வாங்க நாடு முழுவதிலுமுள்ள விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டுவருகிறார்கள்.

இது குறித்து ஒரு இளம் விநியோகஸ்தர் கூறுகையில், கமல்ஹாசன் போன்ற ஒரு சிறந்தநடிகர். அவர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையேபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனும், மணிரத்னமும் மீண்டும்இணைந்தால் அது எவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என சிந்தித்துப் பாருங்கள்என்றார்.

கமல், மணி இணையும் படத்தின் கதை குறித்து எதுவுமே முடிவு செய்யப்படவில்லைஎன்றாலும் இது நாயகன் போலவே மிக வித்தியாசமான படமாக இருக்கும் என்றஎதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil