»   »  ஸ்ரீவித்யாவுடன் கமல் சந்திப்பு!

ஸ்ரீவித்யாவுடன் கமல் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரள மருத்துவனையில் புற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகை ஸ்ரீவித்யாவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல்கூறினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளஅருமையான நடிகை ஸ்ரீவித்யா. மறைந்த பிரபல கர்நாடக இசைப் பாடகிஎம்.எல்.வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா சமீப காலமாக எங்கும்காணப்படவில்லை.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்து விட்ட ஸ்ரீவித்யா அங்குமலையாள டிவி சீரியலில் நடித்து வந்தார். ஆனால் பாதியிலேயே அதிலிருந்தும்விலகி விட்டார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தான் ஸ்ரீவித்யாவுக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பதும்,நோய் முற்றிய நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வுகழகம் மற்றும் மருத்துவனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதும், அவரது நிலைகவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் பரிதாபகரமானநிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீவித்யாவைக்காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். யாரையும் பார்க்க ஸ்ரீவித்யாவிரும்பவில்லை. மிக நெருங்கியவர்கள் மட்டுமே அவரைப் பார்க்க முடிகிறதாம்.

இந்த நிலையில் சமீபத்தில் கொச்சி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அங்கிருந்துதிருவனந்தபுரம் சென்றார். ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்தகமல், நேராக அவர் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்றார். கமல் வருவதைஅறிந்த ஸ்ரீவித்யா, அவரை உள்ளே அனுப்புமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீவித்யாவைப் பார்த்ததும் கமல் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி விட்டாராம்.ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன், கவலைப்படாமல் இருக்குமாறுகூறியுள்ளார். இருவரது சந்திப்பும் மிகவும் உருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

பின்னர் கலங்கிய கண்களுடன் கமல் விடைபெற்று சென்னை திரும்பினார். அவரிடம்ஸ்ரீவித்யாவின் உடல் நலம் குறித்து கேட்டபோது, உடல் நலம்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம். எனவேஅதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் தெரிவித்தார் கமல்.

நல்ல நடிகை ஸ்ரீவித்யா நலம் பெற நாமும் பிரார்த்திப்போம்!

Read more about: kamal meets sri vidhya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil