ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #Kamal60 #UngalNaan
Recommended Video
சென்னை: தமிழ் சினிமா கமலின் 60 ஆண்டுகால சாதனையை கவுரவிக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில் டிவிட்டரில் கமல் 60 மற்றும் உங்கள் நான் என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து குழந்தை நட்சரத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய கமல் 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாக வலம் வருகிறார்.
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், பிலிம் ஃபேர், தேசிய விருதுகள், பத்ம விருதுகள் என அள்ளிக் குவித்திருக்கிறார். இன்னமும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு எழுத்து இயக்கம் என பிஸியாக இருந்து வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள்
இந்நிலையில் அவரது 60 ஆண்டு சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் அவருக்கு விழா நடத்தி வருகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

ட்ரென்டிங்
உங்கள் நான் என்று நடைபெறும் இவ்விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கமல் 60 என்ற ஹேஷ்டேக்கும், உங்கள் நான் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.
கட்டி அணைப்பார்
யார் வந்தாலும் வராவிட்டாலும் தன் நண்பனுக்காக #தலைவர் நிச்சயம் வருவார். கட்டி அணைப்பார். ஆத்மார்த்தமான பேச்சை தருவார். தன்னைத் தாழ்த்தி கமலை உயர்த்துவார். என்றும் கமலை விட்டுக் கொடுக்க மாட்டார். நண்பேன்டா
நோகடிச்சுடாதீங்க
நண்பனை பாராட்டுவதில் குழந்தை மனம் கொண்டவர் எங்கள் தலைவர், அதுக்காக மேடையில அரசியல் ஆதரவுக்காக, கூட்டணிக்காக பொடிவச்சு பேசி தலைவர் மனச நோகடிச்சுடாதீங்க என்று கூறுகிறார் இவர்.
நடிப்பின் திலகம்
கலைதாயின் முத்த மகனே.தமிழ் சினிமாவின் முதல்வனே. நடிப்பின் திலகமே...உங்களை போல் ஒரு நடிகரை பெற இந்திய சினிமா என்ன தவம் செய்ததோ...#UngalNaan நடக்கும் இந்த விழா சீரும்சிறப்பாக நடக்க தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
கமல் உச்சரிக்க..
#உங்கள்நான் என்று கமல் உச்சரிக்க தொடங்கியது #Kamal60 தொடங்கியது! என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
பார்க்கப்போகிறோம்
எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் மனதார பாராட்டிப்பேசுவது எப்படி என்பதை வழக்கம்போல் இன்றும் பார்க்கப் போகிறோம். என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
60 நபர்கள் பட்டியல்
திரைத்துறையில் கமலின் 60 ஆண்டுகள். கமலின் வாழ்க்கையில் முக்கியமான 60 நபர்களை பட்டியலில் இடம்பெற்ற தலைவர் ரஜினி என கூறியிருக்கிறார் இவர்.
என்றும் உங்கள் நான்
உங்களோடு நான் என்றும் உங்கள் நான்!! என்று தெரிவித்திருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











