twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kamal 60: தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் பிள்ளை.. களத்தூர் கண்ணம்மா கண்ட பிக் பாஸ்!

    |

    Recommended Video

    Kamal Hassan:60 Shades of Kamal| Filmibeat Tamil

    சென்னை: களத்தூர் கண்ணம்மாவில் நாம் கண்ட பிள்ளை, இப்போது கலை உலகத்துக்கு விஸ்வரூபம் தந்த பிள்ளை. விஸ்வரூபம் வெறும் படம் மட்டுமல்ல, கமல்ஹாசனின் விஸ்வரூபம் என்றும் சொல்லலாம்.

    ஏவிஎம்மின் பாசப் பட்டறையில், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே என்று அருமை குழந்தை நட்சத்திரமாய் உருவானவர். கூடவே அப்பா அம்மாவின் ஆசியோடும் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர்.

    மக்கள் திலகம் , நடிகர் திலகம், நடிகையர் திலகம், ஜெமினி மாமா என்று இவர் உட்காராத கலை ஜீவிகளின் மடி இல்லை. அதனால்தானோ என்னவோ, இன்றுவரை இவரின் கலைத் தாகம் தீரவில்லை.

    கமல்ஹாசனுக்கு வாய்ப்புக்கள்

    கமல்ஹாசனுக்கு வாய்ப்புக்கள்

    குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த பின்னர் இவருக்கு வாய்ப்புக்கள் அப்படி ஒன்றும் வந்து குவிந்து விடவில்லை. பரத நாட்டியம், குச்சுப்பிடி, மேற்கித்திய நடனம் என்று அத்தனையிலும் கை தேர்ந்த கமல்ஹாசன் நடிக்க வாய்ப்புக்கள் இல்லாமல் என்ன செய்வது என்று சலித்து உட்காரவில்லை. இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் நடன இயக்குநர் வேலைகள் செய்து வந்தார்.

    கமல் தேகம்

    கமல் தேகம்

    அப்போது கமல் மிகவும் ஒல்லியாக இருப்பார்.அந்த உடம்பை தேற்றுவதற்கு என்று அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என்று கூட நடிகையும் கமலின் தோழியுமான ஸ்ரீப்ரியா கூறி இருக்கிறார். இதனால்கூட தனக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் கை நழுவிப் போகிறதோ என்கிற எண்ணம் அவருக்குள் இருந்ததாகவும், அப்போது உடல் தேறுவதற்கு என்று நிறைய சாக்லேட்ஸ், ஐஸ்க்ரீம் சாப்பிடுவார் என்றும் சொல்லி இருக்கிறார்.

    நாகேஷ் கே.பி சார்

    நாகேஷ் கே.பி சார்

    ஒரு நாள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கையில், கே.பி.சாருக்கும் , நாகேஷ் சாருக்கும் விகடகவியாக யாரை நடிக்க வைப்பது என்பதில் வாக்குவாதம் வர. அதுக்காக தெருவுல போறவங்க எல்லாரையும் நடிக்க வச்சுருவியான்னு நாகேஷ் சார் கேட்க, ஓ...நடிக்க வைப்பேனே.. என்று அப்போது நடந்து சென்று கொண்டு இருந்த கமல்ஹாசனை வர சொல்லி நடிக்க வைத்தார்.அதுதான் அவள் ஒரு தொடர்கதை படத்தில் கமல்ஹாசன் விகடகவியாக நடித்தது.

    காதல் மன்னன்

    காதல் மன்னன்

    அதற்குப் பின்னர் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சட்டம் என் கையில், சிவப்பு ரோஜாக்கள் என்று பல பெரும் படங்கள் வரிசையாக குவிந்தன.வெற்றி நடிகனாகவும், காதல் மன்னனாகவும் மக்கள் மனதில் வலம் வந்தார். பிறகு நாயகன், சத்யா, சலங்கை ஒலி இதெல்லாம் வேறு காலக் கட்டம். இதிலும் வித்தியாசமான நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார். விக்ரம் படம் இவர் பின்னால் நடப்பதை முன் கூட்டியயே சிந்திக்கும் திறன் கொண்டவர் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த படம்.இப்போது கணினி இல்லாத வீடு ஒரு சில என்பது போல வந்திருக்கிறது.

    பேசும் படம்

    பேசும் படம்

    பேசாத படத்துக்கு பேசும்படம் என்று பெயர் சூட்டி வெற்றி வாகை சூடியவர்.ஹே ராம் படம் வேற லெவல். இப்படி இவரின் முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். கற்றது கை அளவு கல்லாதது கடலளவு என்பார்கள். பதிலாக நமக்கு கமல்ஹாசன் பற்றி தெரிந்தது கை அளவு, தெரியாதது கடல் அளவு என்று சொல்லலாம். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்,

    நாத்திகமும் ஆத்திகமும்

    நாத்திகமும் ஆத்திகமும்

    ஆத்திகத்தையும் அலசி ஆராய்ந்து பேசும் திறன் கொண்டவர். நாத்திகத்தையும் ஈடு இணையாக பேசுபவர். படிக்கும் ஆர்வத்தை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக் கொண்டே, மற்ற பணிகளை செவ்வனே செய்து வந்தாலும் நேரம் போதவில்லை என்று வாய் தவறியும் கூட சொல்லாதவர். இவரிடம் கற்க வேண்டியது அதிகம் என்றாலும், இவர் இன்னும் நமக்கு தர வேண்டியதும்,அதை நாம் பார்த்து மகிழ வேண்டியதும் அதிகம் இருக்கிறது.

    விருமாண்டி படத்தில் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பற்றி கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த வீர தமிழ் திருமகன் மீசையை முறுக்கிக் கொண்டு அதே மிடுக்குடன் வாழ்க பல்லாண்டு.

    English summary
    The child we saw at Kalathoor Kannamma, is now a child of the art world. Viswaroopam is not just a film, it is also a film of Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X