For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல் 60.. திரையுலகம் எடுக்கும் முப்பெரும் விழா.. நண்பரை கவுரவிக்க வரும் ரஜினி.. நட்புன்னா இதுதாங்க!

  |
  Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

  சென்னை: திரையுலகில் 60 ஆண்டுகளமாக சாதனைகள் பல செய்து கொண்டிருக்கும் உலகநாயகனை பாராட்ட திரையுலகம் எடுக்கும் முப்பெரும் விழாவில், தனது நண்பரை கவுரவிக்க வருகைதரவிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

  "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே" என கலைத்தாயை வணங்கி தனது திரையுலப் பயணத்தை கலைஞானி தொடங்கிய அறுபதாவது ஆண்டு இது. தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் பெருமைக்கொள்ளும் மனிதர் கமல் ஹாசன்.

  புதுமைப்பித்தன் கமல் சினிமாவில் செய்யாத புதிய முயற்சிகளும், புரட்சிகளும் எதுவும் இல்லை. தற்போது ஹிட்டாகும் பல கதைகளை, பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்து பார்த்தவர் அவர். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த விஞ்ஞானி நம் கலைஞானி.

  இது வேற லெவல் வெறித்தனம்.. 'தளபதி 64' ரிலீஸ் எப்போ தெரியுமா?

  தேவர்மகனின் அறிவுரை

  தேவர்மகனின் அறிவுரை

  இன்று அசுரனில் சொல்லப்பட்ட விஷயத்தை தான் அன்றே தேவர்மகனாக எடுத்தார் கமல். சாதிப் பெருமை பேசி, வேல்கம்பும், வீச்சரிவாளுமாக சுற்றிக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு, 'போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்கையா' என புத்திமதி சொன்னவர் நம்மவர்.

  குணாவும் பேசும்படமும்

  குணாவும் பேசும்படமும்

  திரையில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பேசாமடந்தையாக வெளிவந்தது `பேசும்படம்'. தோல்யுற்ற 'குணா'வின் வெற்றிப்பெற்ற மாடர்ன் வெர்ஷன் தான் 'காதல் கொண்டேன்', 2004ல் கொடுங்கோள் அரக்கனாக நமக்கு அறிமுகமான சுனாமியை, ஓராண்டுக்கு முன்னரே அன்பே சிவமாக எச்சரித்த அறிவுஜீவி கமல் ஹாசன்.

  கமல் பிறந்தநாள்

  கமல் பிறந்தநாள்

  கே.பாலச்சந்தரின் மடியில் சினிமா கற்று, கலைத்தாயின் மூத்த மகனாய் திகழ்ந்து கொண்டிருக்கும் கமலுக்கு வரும் 7ம் தேதி 65வது பிறந்தநாள். 65 வயதில் 60 ஆண்டுகளாக திரை வாழ்வை பூர்த்தி செய்த மாமேதை கமல். அவரது பிறந்தநாளையொட்டி ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் திரையுலகம் சார்பில் முப்பெரும் விழா எடுக்கப்படுகிறது.

  தந்தைக்கு சிலை

  தந்தைக்கு சிலை

  வரும் 7ம் தேதி தனது பிறந்த தினத்தன்று பரமக்குடி செல்லும் கமல், தனது தந்தை சீனிவாசனின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார். அடுத்தநாள் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில், தனது கலையுலக தந்தை கே.பாலசந்தரின் சிலையை திறக்கிறார்.

  ஹே ராம் சிறப்பு திரையிடல்

  ஹே ராம் சிறப்பு திரையிடல்

  இதையடுத்து அன்று மதியம் 3 மணி அளவில், சென்னை சத்யம் தியேட்டரில் ஹே ராம் படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. படம் முடிந்த பிறகு, அதே அரங்கில் திரையுலக பிரமுகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கமல் பதிலளிக்கிறார். அப்போது மகாத்மாகாந்தியின் 150 ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

  இளையராஜா இசை நிகழ்ச்சி

  இளையராஜா இசை நிகழ்ச்சி

  மூன்றாவது நாள் நவம்பர் 9ம் தேதி, கலைஞானிக்காக இசைஞானி இளையாராஜாவும், எஸ்.பி.பியும் இணைந்து பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதில் கமலும் அவர்களுடன் சேர்ந்து பல பாடல்களை பாட இருக்கிறார். கமலுடன் அவரது இரண்டு மகள்களும் இணைந்து பாட இருக்கிறார்கள்.

  கமலை கவுரவிக்கும் ரஜினி

  இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினி, இதில் கலந்துகொண்டு கமல் ஹாசனை கவுரவிக்கிறார். ரஜினிக்கும், கமலுக்கு இடையே 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. திரையில் அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தாலும், இருவரும் நேர் எதிரான கொள்கைகளை பின்பற்றினாலும், அரசியலிலும் எதிர் திசையில் இருந்து மோதிக்கொண்டாலும், கமலுக்கும், ரஜினிக்கும் இடையேயான நட்பு அற்புதமானது. இளம் தலைமுறை நடிகர்கள் அவர்களிடம் இருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும்.

  English summary
  Its is said that actor Rajini will grace the Kamal 60 event purely for friendship which is happening on November 9.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X