»   »  சர்ச்சை போஸ்டர்: விஷமிகளின் செயல்-கமல்

சர்ச்சை போஸ்டர்: விஷமிகளின் செயல்-கமல்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனை நபிகள் நாயகம் என வர்ணித்து சென்னை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு நடிகர்கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் செய்த செயல்என அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர் நற்பணிமன்றம் சார்பில் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை நகரின் சில பகுதிகளில் நேற்று கமல் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.அதில் நபிகள் நாயகமே என்று குறிப்பிட்டு கமல்ஹாசனை வாழ்த்தி போஸ்டர்கள் அடிக்கப்பட்டிருந்தன.

இதற்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் அந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் இந்த போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்து கமல் அறிக்கை விட்டுள்ளார். அதில், சமீபத்தில்எனது ரசிகர்கள் என்ற பெயருடன் சில விஷமிகள் குறிப்பிட்ட மதத்தார் மனம் புண்படும்படியாக என் பெயருடன்இணைத்து போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

எனது ரசிகர்கள் நற்பணியாளர்களாகவும், மன்றங்கள் நற்பணி மன்றங்களாகவும் மாறி 20 வருடங்கள் ஆகின்றன.விஷமிகளின் செயல், மத, அரசியல் சார்பற்று இயங்கும் எனது நற்பணி மன்றத்தாருக்கும், மதமோ, அரசியல்சார்போ இல்லாமல் வாழும் எனக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும், என்னையும் மனம் புண்படச் செய்யும், இந்த செயல்பாடுகளுக்காகசம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்பதும், இனி இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும்அவர்களுக்கு நல்லது.

பல காலமாக மத நல்லிணக்கத்தின் உதாரணமாக திகழும் தமிழகத்துக்கும், அதுவே அவர்கள் செய்யும்சேவையாகும்.

விஷமிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட, எச்சரிக்கை விடுப்பதே நற்பயன் விளைவிக்கும் என்றஎண்ணத்தில் இந்த அறிக்கை என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

Read more about: kamal warns miscreants
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil