அப்பவே A Certificate படங்களில் நடித்துள்ள கமல்... ரசிகர்களே திகைத்து நின்ற காட்சிகள்!
சென்னை: கடந்த வாரம் வெளியான பத்து தல படத்துக்கு U/A, விடுதலைக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்தன.
விடுதலை படத்தில் நிர்வாண காட்சிகளும் வன்முறை தொடர்பான சீன்களும் அதிகம் இருப்பதால் ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டது.
இதனால் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுடன் படம் பார்க்கச் சென்ற பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால், அப்பவே A Cetificate படங்களில் நடித்து ரசிகர்களை திணறடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சிகப்பு ரோஜாக்கள் : தமிழ் சினிமாவின் முதல் முத்த புரட்சி நாயகன் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு தான் உள்ளது. அதேபோல், அதிகமான ஏ சர்டிபிகேட் படங்களில் நடித்தவரும் இவராகவே இருக்க முடியும். 1978ம் ஆண்டிலேயே இவரது நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் ரசிகர்களை கிறங்கடித்தது. பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சைக்கோவாக நடித்திருந்தார் கமல். கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியும் நடிக்க, ரசிகர்கள் சொக்கி தான் போனார்கள்.
கமலின் டிக் டிக் டிக்: அதேபோல், 1981ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் திரைப்படமும் ஏ சான்றிதழுடன் வெளியானது. இதிலும் கமல் - பாரதிராஜா கூட்டணி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தது. கமலுடன் மாதவி, ராதா, சரிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் முழுக்க அதிகமான பிகினி காட்சிகள் இருந்ததால் ஏ சர்டிபிகேட் கிடைத்தது. ரசிகர்களும் டிக் டிக் டிக் படத்தை பார்த்துவிட்டு கமல் மீது பொறாமை கொண்டனர்.
குருதிப்புனல்: 1995ம் ஆண்டு வெளியான குருதிப்புனல் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும். ஆனால், இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது. பிசி ஸ்ரீராம் இயக்கிய இந்தப் படத்தில் கமல், நாசர், கெளதமி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் கெளதமியை வில்லன் ரேப் செய்ய முயற்சிக்கும் ஒரு காட்சி, மிகவும் கவர்ச்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படம் வெளியானதும் இந்த ஒரு காட்சிக்காக திரையரங்கில் ரசிகர்கள் குவிந்தனர். இப்போதும் அந்த காட்சியை யூடியூப் போன்ற வலைத்தளங்களில் ரசிகர்கள் தேடி பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையான ஹேராம்: 2000ம் ஆண்டில் வெளியான ஹேராம் படத்தை கமல்ஹாசனே இயக்கி நடித்திருந்தார். காந்தியின் படுகொலையை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றன. அதேபோல், கமல் - வசுந்தரா தாஸ் இருவரும் நடித்த சில காட்சிகளும் கவர்ச்சியாகவே படமாக்கப்பட்டிருக்கும். இதனால் ஹேராம் திரைப்படமும் ஏ சர்டிபிகேட் உடனே வெளியானது. இதுதவிர இன்னும் பல கமல் படங்களும் ஏ சான்றிதழுடனே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











