Kamal: சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து ஓவர்... அடுத்து உலகநாயகன்... கமல் கொடுத்த விளக்கம்!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார்.

அதன்பின்னர் கடந்த இரு தினங்களாகவே சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடு பிடித்துள்ளது.

இந்த பஞ்சாயத்து முடியும் முன்னரே கமலின் உலகநாயகன் டைட்டில் பற்றியும் நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 Kamal: Actor Kamal explains about Ulaganayagan title

தொடங்கியது உலகநாயகன் பஞ்சாயத்து: திரையுலகில் நடிகர்களின் பெயருக்கு முன்னால் சிறப்பு டைட்டில்கள் போட்டுக்கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமாக சூப்பர் ஸ்டார் டைட்டில் மீது ஆசைப்படாத நடிகர்களே இருக்க முடியாது. ஆனாலும், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் டைட்டிலை கெட்டியாக பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.

"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடல் வாரிகள் இப்போது வரை ரஜினிக்கு மட்டுமே பொருந்துகிறது. இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து மனம் திறந்திருந்தார். தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு ஆசைப்பட்டதில்லை எனக் கூறியிருந்தார்.

அதேபோல், காகம் - பருந்து இரண்டையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரியும் கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு கோலிவுட்டில் புயலை கிளப்பியது. இந்த பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்து 'உலகநாயகன்' என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர் நெட்டிசன்கள். சூப்பர் ஸ்டார் டைட்டில் போன்றே உலகநாயகன் டைட்டிலும் ட்ரோலுக்கு உள்ளானது.

இதனால் பொறுமையிழந்த உலகநாயகனின் ரசிகர்கள், நெட்டிசன்களுக்கு எதிராக கம்பு சுற்றி வருகின்றனர். மேலும், உலகநாயகன் பட்டம் குறித்து கமல் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து பதிலடி கொடுத்துள்ளனர். அதில், "விபூதி வைக்க வரும் தாய்மார்களிடம் பகுத்தறிவு பேச மாட்டேன். ஏன்னா அவங்க அன்பா வைக்க வராங்க, அதேபோல் தான் இந்த உலக நாயகன் பட்டமும். ரசிகர்களுக்கு சந்தோஷம், ஆனா எனக்கு நல்ல நடிகர்னு சொன்னா சந்தோஷப்படுவேன். பட்டங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்" என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வரும் கமல் ரசிகர்கள், அவர் ஒருபோதும் பட்டங்களுக்கு ஆசைப்பட்டது இல்லை என கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் டைட்டிலுடன் உலகநாயகன் பஞ்சாயத்தும் இப்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேநேரம் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு மட்டுமே எப்போதும் போட்டி இருக்கும், ஆனால், உலகநாயகன் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான் எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X