Kamal: KH 234 நாயகன் படம் மாதிரி தான் இருக்கும்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கமல்ஹாசன்

அபுதாபி: கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

இந்தப் படம் குறித்து அபுதாபியில் நடைபெற்ற IIFA விருதுகள் விழாவில் கமல் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற IIFA 2023 விருதுகள் விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 Kamal: Actor Kamal Haasan about his KH 234 film with Director Mani Ratnam

KH 234 நாயகன் படம் மாதிரி இருக்கும்

கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்த கமல், தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பையும் முடித்துவிட்டாராம். இதனிடையே நேற்று அபுதாபியில் நடைபெற்ற IIFA 2023 விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் நடிகர் கமலுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது 234வது திரைப்படம் குறித்து பேசினார். கடந்தாண்டு நவம்பரில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி KH 234 படத்தை மணிரத்னம் இயக்குவது உறுதியானது. ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன், தமிழ் சினிமாவில் ஒரு ஐக்கானிக் படமாக அமைந்தது. அதன்பின்ன கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவே இல்லை. சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகிவிட்ட நிலையில், KH 234 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் மணிரத்னம்.

 Kamal: Actor Kamal Haasan about his KH 234 film with Director Mani Ratnam

அதேபோல், இந்தியன் 2 படத்தின் வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக KH 234 படப்பிடிப்பில் கமல் இணைவார் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் KH 234 படம் பற்றி மனம் திறந்துள்ளார் கமல்ஹாசன். "நாங்கள் KH 234 பட வேலையை தொடங்கிவிட்டோம். ஆனால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு எங்களை பதற்றமடைய வைக்கின்றன. இருப்பினும் நாங்கள் கூலாக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் KH 234 படமும் நாயகன் மாதிரி தான் இருக்கும் என செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால், KH 234 படத்தில் கமல் டான் கேரக்டரில் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், KH 234 கேங்ஸ்டர் ஜானர் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X