Kamal: ஆண்டவரே! இனி ஹாலிவுட்டே கதிகலங்கும்... ப்ராஜெக்ட் கே கமல் லுக் இதுதானா..?
கலிஃபோர்னியா: ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் நாளை (ஜூலை 21ம் தேதி) வெளியாகிறது.
அமெரிக்காவில் நடைபெறும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

இந்தப் படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கமலின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டுக்கு சவால் விடும் உலக நாயகன்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ராணா ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். இவர்கள் ஹீரோவாக பிரபாஸும், கமல் வில்லனாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் காமிக்ஸ் படங்களைப் போல, சூப்பர் ஹீரோ ஜானரில் ப்ராஜெக்ட் கே உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடப்பதுடன், கிராபிக்ஸ் வேலைகளும் பிரபல ஹாலிவுட் சிஜி நிறுவனமே மேற்கொண்டு வருகிறதாம்.
இந்த எதிர்பார்ப்பையெல்லாம் எகிற வைக்கும் விதமாக ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஜூலை 21) வெளியாகிறது. அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக பிரபாஸின் ஃப்ர்ஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரபாஸ் சூப்பர் ஹீரோ லுக்கில் மாஸ் காட்டினாலும், அவரது ரசிகர்களிடம் இது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
இந்நிலையில், பிரபாஸைத் தொடர்ந்து கமல், அமிதாப், தீபிகா படுகோன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே கமல்ஹாசனின் மிரட்டலான போஸ்டர் ஒன்று திடீரென டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. ஹாலிவுட் பட சூப்பர் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் செம்ம மெர்சலாக மாஸ் காட்டுகிறார் கமல். ப்ராஜெக்ட் கே படத்தில் கமலுக்கு வில்லன் கேரக்டர் என்பதால், இந்த போஸ்டரும் அனல் தெறிக்கிறது.
ஆனால், இது படக்குழு வெளியிட்ட அபிஸியல் போஸ்டர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் வெளியிடப்பட்ட இந்த ஃபேன் மேட் போஸ்டர், ஒரிஜினலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாகியுள்ளது. இருப்பினும் இதேபோன்ற கமல்ஹாசனின் ஒரு தரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ப்ராஜெக்ட் கே படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











