»   »  மகளுக்கு அட்வைஸ் கூறிய அப்பா கமல்ஹாசன்!

மகளுக்கு அட்வைஸ் கூறிய அப்பா கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மகளுக்கு அட்வைஸ் கூறிய கமல்ஹாசன்!- வீடியோ

சென்னை : நடிகர் கமல்ஹாசன், ஒரு பக்கம் அரசியல், இன்னொரு பக்கம் 'விஸ்வரூபம் 2' படத்தின் ரிலீஸ் வேலைகள், ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் என பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையிலும், அவர் இடையிடையே தன் மகள்கள் அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசனுடன் நேரத்தைச் செலவு செய்து வருகிறார். நடிகர் கமல் தனது இளைய மகள் அக்ஷரா ஹாசனுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதோடு அக்‌ஷராவுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார் கமல். ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

அரசியல், திரைப் பணிகளுக்கு இடையே தனது உடல்நலனையும் சிறப்பாக மெயின்டெய்ன் செய்துவரும் கமல், தனது மகள்களுக்கு ரோல்மாடல் அப்பாவாகவே இருந்து வருகிறார். கமலின் அறிவுரைக்கு அக்‌ஷரா ஹாசனும் நன்றி கூறியுள்ளார்.

English summary
Kamal Haasan has recently posted a photo on his twitter page with his younger daughter Akshara Hassan. He also gave advice to Akshara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X