இவ்ளோ நீளமா பேசாதீங்க.. மொக்கைப் போட்ட அனிதாவுக்கு ஹனுமான் கதையை சொல்லி கமல் அட்வைஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் அனிதா சம்பத்துக்கு அட்வைஸ் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வியாழக்கிழமை நீங்கா நினைவுகள் என்ற டாஸ்க்கை கொடுக்கப்பட்டது.
இதில் ஹவுஸ்மேட்ஸ் யாரை ரொம்ப மிஸ் பண்றாங்க என்பதையும் அவருடைய நினைவுகளையும் பகீர வேண்டும்.

கண்ணீரும் கம்பளியுமாய்
ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சுறுக்கமாகவும் சுவாரசியமாகவும் பேசி முடித்தனர். ஆனால் அனிதா மட்டும் நீண்ட நேரம் கண்ணீரும் கம்பளியுமாய் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் அனிதாவின் பேச்சை கேட்க முடியால் நெளிந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

பல்லைக் கடித்துக் கொண்டு
ஷிவானி, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் ஆகியோர் இருந்த இடத்திலேயே செமயாய் கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் என பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ஒரு வழியாய் முடித்தார்
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சம்யுக்தா. அனிதா ரொம்ப லாங்கா போகுதும்மா.. என்று கூற அப்படி சீக்கிரம் முடிக்கிறேன் என்று கூறி ஒரு வழியாய் முடித்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்தனர்.

ரவுடியை போல்..
இந்நிலையில் இன்றைய எபிசோடில் நடிகர் கமல் அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் கிண்டலடித்தது குறித்து கேட்டார். அனிதா பேசும்போது ஹவுஸ்மேட்ஸ் ரவுடியை போல் நடந்துக்கொண்டார்கள் என்றார்.

எனக்கு ஒரு கெட்டப் பழக்கம்
மேலும் அதுகுறித்து ரம்யா, ஷிவானி மற்றும் சம்யுக்தாடமும் கேட்டார் கமல். அதற்கு பதில் சொன்ன ரம்யா எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு சார், சிரிக்க தொடங்கிவிட்டால் நிறுத்த முடியாது என்றார். தொடர்ந்து பேசிய ஷிவானி, அனிதா டாஸ்க்கை தாண்டி பேசியதாக தோன்றியது என்றார்.

பசி எடுக்கவில்லையா?
அவரை தொடர்ந்து பேசிய சம்யுக்தா, பலருக்கும் முதுகு வலிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், பசி எடுத்ததாகவும் கூறினார். அதனைக் கேட்ட கமல் மற்றவர்கள் பேசும்போது அப்படி தோன்றவில்லையா என்றார்.

சுறுக்கமாய் பேசுங்கள்
தொடர்ந்து அனிதா பக்கம் சென்ற கமல், ரத்தின சுறுக்கமாய் பேசுங்கள் என சீத்தாவை சந்தித்ததை அனுமர் ராதாவிடம் எப்படி சொன்னார் என்ற கதையை சொல்லி அட்வைஸ் செய்தார். நீங்கள் ஜர்னலிஸ்ட் அனிதா உங்களுக்கு புரியும் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.


Click it and Unblock the Notifications











