ரூல்ஸ பிரேக் பண்ணாதீங்க.. கேம்ம ஸ்பாயில் பண்ணாதீங்க.. பாலாஜியை கழுவி கழுவி ஊற்றிய கமல்!
சென்னை: மணிக்கூண்டு டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த போட்டியாளர்களை பாராட்டிய கமல், பாலாஜியை கடுமையாக கழுவி ஊற்றினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பங்கேற்ற கமல் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
அப்போது பிளாக் அன்ட் வொயிட் டாஸ்க்கில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்களையும் பாராட்டினார்.

முதலிடம் பிடித்த டீம்
அந்த வகையில் கடந்த வாரம் முக்கிய டாஸ்க்காக பார்க்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க்கையும் பாராட்டினார். மணிக்கூண்டு டாஸ்க்கில் முதலிடத்தை பிடித்த அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் சேகர் ஆகியோரை பாராட்டினார்.

ஆச்சரியப்பட்டேன்
தொடர்ந்து ஆரி, ரியோ, கேபி ஆகியோர் 3 மணிநேரம் 1 நிமிடம் என நேரத்தை கணித்தது மெக்கானிசமாய் இருந்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று பாராட்டினார். தொடர்ந்து டாஸ்க்கில் சிறப்பாய் செயல்பட்டவர்களை பாராட்டிய கமல், தன்பாட்டுக்கு விளையாடி கன்னாபின்னாவென கணக்குப்போட்டு பாலாஜி பக்கம் திரும்பினார்.

நான் சொல்வதை கேட்கிறீர்கள்
அப்போது, பாலாஜி மற்றும் அவரது டீம் மெட்ஸான ரம்யா மற்றும் சுச்சியை அழைத்தார் கமல். தொடர்ந்து பேசிய கமல் தான்தான் தவறு என பொறுப்பேற்ற சுச்சியை ஆறுதல் படுத்தினார். பின்னர் பாலாஜியிடம் பேசிய கமல் நீங்கள் தலைவாருவதில் இருந்தே நீங்கள் நான் சொல்வதை கேட்கிறீர்கள் என்று தெரிகிறது.

ரூல்ஸை பிரேக் பண்ணாதீங்க
ஸ்படிக மாலையை வைத்து கோபமெல்லாம் வரக்கூடாது என ஜபமெல்லாம் செய்தீர்கள் என்றார். தொடர்ந்து பாலாஜியிடம் பேசிய கமல், 3 மணி நேரத்தை ஒரு மணி நேரம் 26 நிமடங்களில் கணித்துள்ளீர்கள். ரூல்ஸை பிரேக் பண்ணாம விளையாடுங்கள், அது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

முன்னேற வாய்ப்பாக இருக்கும்
மேலும் கேம்மோட ஸ்பிரீட்ட நீங்கள் ஸ்பாயில் பண்ணாமல் விளையாடுங்கள் என்று கழுவி ஊற்றிய கமல் அப்படி விளையாடினால் உங்க டீம் மெட்ஸ் சந்தோஷப்படுவார்கள், நீங்கள் முன்னேறவும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.

இதிலும் ரூல்ஸ் பிரேக்கிங்கா
தொடர்ந்து குக்கு டாஸ்க்கின் போதும் பாலாஜியை விளாசினார். அதாவது குக்கு தொப்பியை நான் கையில் போட்டுக் கொள்கிறேன், தலையில் போட்டால் முடி களைந்து விடும் என்றார். அதனைக் கேட்ட கமல், இதிலும் ரூல்ஸ் பிரேக்கிங்கா என்று கூறி அசிங்கப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











