மத்தவங்க பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. கடைசி நாளிலும் அனிதாவுக்கு நறுக்கென குட்டு வைத்த கமல்!

சென்னை: கடைசி நாளிலும் அனிதாவுக்கு நறுக்கென குட்டு வைத்து அனுப்பினார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களை பற்றி நான் பேசுவேன், ஆனால் என்னைப் பற்றி யாரும் பேசவே கூடாது என்ற மனநிலையுடன் இருந்தவர் அனிதா.

என்ன பிரச்சனை என்றாலும் தான் நினைப்பதை பேசுவார். ஆனால் மற்றவர்கள் தங்களின் கருத்தை சொல்ல வந்தால் நீங்கள் அதை சொல்லக்கூடாது, இதை சொல்லக்கூடாது என வறுத்தெடுத்துவிடுவார்.

மீண்டும் வந்த பிரச்சனை

மீண்டும் வந்த பிரச்சனை

அந்த வகையில்தான் கடந்த வாரம் ஆரி வெஞ்சென்ஸ் கேம் விளையாடுவதாக கூறி, அவரை பேசவிடாமல் உதட்டைக் கடித்து நாக்கை துருத்தி மக்களின் கோபத்திற்கு ஆளானார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரிக்கும் அனிதாவுக்கும் இடையிலான பிரச்சனையை மீண்டும் எடுத்து வந்தார் கமல்.

ரொம்ப காயப்படுத்தியது..

ரொம்ப காயப்படுத்தியது..

அப்போது பேசிய ஆரி, அனிதா தன்னை வெஞ்சன்ஸ் கேம் ஆடுவதாக சொன்னது ரொம்பவே காயப்படுத்தியது. அவரிடம் தான் நான் பேசுவேன், அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். அப்படி இருக்கும் போது அனிதா, இதை பேசாதே அதை பேசாதே என்று கூறுவது அப்புறம் எதற்கு பேச வேண்டும் என்று தோன்றுகிறது என்றார்.

போட்டி மனப்பான்மை

போட்டி மனப்பான்மை

அதனைக் கேட்ட கமல், ஒரு ஜோக் சொன்னால் கூட பதிலுக்கு பதில் பேசுவேன் என்று சொன்னால் அது ஒரு போட்டி மனப்பான்மை ஆகிவிடும் என்று அனிதாவுக்கு அட்வைஸ் கூறினார். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை என் குரல் தான் சிறந்தது என்று நினைத்தேன் என்ற கமல், எப்போது மற்றவர்கள் குரரை கேட்க தொடங்கினேனோ அப்போதே சிறந்த குரல்கள் இருப்பது தெரியவந்தது.

குட்டு வைத்த கமல்..

குட்டு வைத்த கமல்..

அதனால் அனிதா மற்றவர்கள் பேசுவதற்கும் செவி சாயுங்கள். மற்றவர்கள் பேசுவதை கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தான் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு எதுவும் வராது. தகராறும் அப்படிதான் என்று கடைசி நாளிலும் நறுக்கென குட்டு வைத்தார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X