கமல் கொடுத்த ஐடியா... மொத்தமாக மாறிய சிம்பு... 100 கோடி பட்ஜெட்டில் STR 48!
சென்னை: சிம்புவின் பத்து தல ஆடியோ லான்ச் வரும் 18ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பத்து தல படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது.
பத்து தல இசை வெளியீட்டு விழாவுக்காக தாய்லாந்தில் இருந்த சிம்பு சென்னை வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
கமல் கொடுத்த ஐடியாவில் முற்றிலுமாக ஆளே மாறிப் போய் செம்ம ஸ்மார்ட்டாக வந்துள்ளாராம் சிம்பு. மேலும், இந்தப் படத்தின் பட்ஜெட் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திரும்பிய சிம்பு
சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பத்து தல படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் டீசரும் வெளியாகிவிட்டன. அதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி நடைபெறும் விழாவில் பத்து தல ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தாய்லாந்தில் இருந்த சிம்பு சென்னை திரும்பியதாக சொல்லப்படுகிறது.

ஸ்மார்ட்டாக மாறிய சிம்பு
மாநாடு படத்திற்காக வெயிட்டை குறைத்த சிம்பு, பத்து தல ஏஜிஆர் கேரக்டருக்காக மீண்டும் பழைய மோடுக்கே மாறினார். அதனையடுத்து மீண்டும் உடல் எடையை குறைக்க சிம்பு தாய்லாந்து சென்றதாக சொல்லப்பட்டது. மேலும், STR 48 படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையையும் பயிற்சி எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளாராம். இதெல்லாம் கமல் கொடுத்த ஐடியா தான் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் சிம்பு
சிம்புவின் STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி, சிம்புவின் புதிய படத்தை இயக்கவுள்ளார். விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது "கமல் சார் நடித்த எதாவது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வேண்டும், அல்லது அவரது படத்தை ரீமிக்ஸ் செய்ய வேண்டும்" என விருப்பம் தெரிவித்தார் சிம்பு.

பட்ஜெட்டை அதிகரித்த கமல்
அதன்பிறகு பேசிய கமல், "சிம்பு என்னுடன் இணைந்து நடித்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறியிருந்தார். அப்போதே கமல் - சிம்பு கூட்டணி கன்ஃபார்ம் என ரசிகர்கள் கூறி வந்தனர். அதன்படி தற்போது சிம்புவின் STR 48 படத்தை தயாரிக்கிறது கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ். இந்தப் படத்தை தயாரிப்பது மட்டுமின்றி, கேமியோ ரோலிலும் நடிக்கவுள்ளராம் கமல்ஹாசன். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் புதிய அப்டேட்
STR படத்தின் பட்ஜெட், கேமியோ ரோலில் கமல் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. மேலும் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய சிம்பு, தாடி, மீசை இல்லாமல் மன்மதன் கெட்டப்பில் வந்திறங்கியதாக சொல்லப்படுகிறது. முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் STR 48 படத்தில் சிம்புவின் கேரக்டர் சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என்பது இதன்மூலம் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், கமலின் கேமியோ ரோல் அதைவிடவும் தரமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்காகவே 100 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிப்பதோடு கமலும் கேமியோ ரோலில் நடிப்பது கோலிவுட்டை மிரள வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











