பதறாதீங்க.. பதறாதீங்க.. நீங்க நிஜமாவே நல்ல கேப்டன் தான் ஆரி.. பாராட்டிய கமல்.. சிலருக்கு எரியுமே?

சென்னை: ஆரி கேப்டன்ஷிப் பற்றி குறை சொன்ன எதிரி சம்யுக்தா கூட ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவரை பற்றி கூறினார்.

ஆனால், ஆரி நல்லவர், நல்லவருன்னு சொல்லிட்டு சனம் ஷெட்டியும், அனிதா சம்பத்தும், தங்களின் மொத்த குரோதத்தையும் அவர் மீது கொட்டினார்கள்.

அதை எதிர்த்து ஆரி கடுமையாக வாதாட துடித்தார். உடனே கமல், அவங்களையெல்லாம் பெருசா மதிக்காதீங்க, நீங்க நிஜமாவே நல்ல கேப்டன் தான் கூல் என ஆரியை ஆசுவாசப்படுத்தியது சிறப்பு.

ஏன் தான் கேப்டன் ஆனேனோ

ஏன் தான் கேப்டன் ஆனேனோ

சம்யுக்தா கேப்டனாக இருந்தபோது, கேப்டன்சியை சரியாகவே பண்ணல, பாலாவின் பப்பட் கேப்டனாகவே அவர் செயல்பட்டார். கடந்த வாரம் கமல் விவாதிக்கும் போது, ஏன் தான் கேப்டன் ஆனேனோன்னு தெரியல சார் என மீண்டும் அழுது புலம்பினார். ஆனால், இந்த வாரம் ஆரி நிலையாக தனது வாதங்களை அடுக்கினார்.

சனம் குற்றச்சாட்டு

சனம் குற்றச்சாட்டு

கிச்சன் டீம் மட்டுமின்றி, எல்லா டீமுடனும் ஆரி, ரொம்பவே அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டார். சாப்பாட்டை வீணடித்தது குறித்து கேட்டதற்கு, சனம் ஷெட்டி சொன்ன பதிலை நேற்றைய நிகழ்ச்சியில் கமல் நல்லாவே விளாசினார். ஆரி ரொம்ப நல்லவர் என வாயாற சொல்லிவிட்டு, அவரை ஒட்டுமொத்தமாக வைத்து செய்தது சனம் தான்.

அனிதாவும் சும்மா இல்லை

அனிதாவும் சும்மா இல்லை

வாரத்தின் முதல் நாள் ஆரியுடன் ஆரம்பித்த சண்டையை மீண்டும் வெள்ளிக்கிழமை அனிதா தொடங்கினார். கமல் பேச்சுக்கே அனிதாவும் சனமும் செவி சாய்க்காமல் ஆரியை பற்றி ஏகப்பட்ட அவதூறுகளை அடுக்கினார்கள். அனிதாவின் ஆட்டிட்யூட் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் இரிடேட் பண்ணியது.

திட்டமிட்டே அசிங்கப்படுத்தினர்

திட்டமிட்டே அசிங்கப்படுத்தினர்

கடந்த வாரம் வெறும் வாயை வைத்துக் கொண்டு தான் பிக் பாஸ் வீட்டில் நீங்க பிழைக்கிறீங்க என்று மற்றவர்கள் அதே வாயை வைத்துக் கொண்டு ஆரியை டார்கெட் பண்ணார்கள். மேலும், அழுதே கேப்டன்சி பதவியை வாங்குனீங்க என பாலாவும், சம்யுக்தாவும் ரொம்பவே அசிங்கப்படுத்தினர்.

பாலா பாராட்டு

பாலா பாராட்டு

ஆனால், இந்த வாரம் ஆரியின் கேப்டன்சி எப்படி இருந்தது. சொன்னதை செய்து காட்டினாரா என கமல் கேட்டதற்கு, முதல் ஆளாக எழுந்து நின்று, தன் பிரச்சனைக்கு ஆரி வராத காரணத்தினால், ஆரியின் கேப்டன்சி சூப்பர் என பாலாவே பாராட்டு பத்திரம் வாசித்ததை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், சம்யுக்தாவை எப்படி அழகா பாலா கழட்டிவிட்டான் பார்த்தியா என கமெண்ட் அடிக்க வாய்ப்பாக அமைந்து விட்டது.

கமல் என்ன சொன்னார்

கமல் என்ன சொன்னார்

ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஆரியின் கேப்டன்சியை பாராட்டிய நிலையில், சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஆகிய மூன்று பேர் மட்டுமே ஆரியை குறை கூறினார்கள். அதற்காக நீளமாக வாதாட ஆரம்பித்த ஆரியை பார்த்து, அதற்காக எல்லாம் ரொம்ப வாதாட வேண்டாம், நீங்க ஒரு நல்ல கேப்டன் தான் என பாராட்டினார்.

ஆஜீத் என்ன பண்ண போறாரோ

ஆஜீத் என்ன பண்ண போறாரோ

ஆரியையே வச்சி இந்த செய் செய்றாங்களேன்னு அடுத்த கேப்டன் ஆஜீத் பயந்து விடக் கூடாது. நீங்களும் ஒரு நல்ல கேப்டனாக வீட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என கமல் சொன்னார். சார் அப்போ என்னோட பழைய எடுபிடி வேலையை பார்ட் டைம்மா செய்யலாமா? என்பது போல எல்லாம் தெரிந்தது போல ஆஜீத் தலையாட்டி இருக்கிறார். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X