Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
‘விக்ரம்’ படம் கதை இதுதானா?....கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மூவரும் கைதிகளா?...
சென்னை : விக்ரம் படத்தின் கதை குறித்த தகவல் வழக்கம் போல இணையத்தில் கசிந்துள்ளது.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
என்ன மனுஷன்யா.. ஒவ்வொரு லுக்கிலும் சும்மா மிரட்டுறாரே விக்ரம்.. கோப்ரா படத்தின் அதீரா பாடல் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. ஜுன் 3ந் தேதி மாதம் வெளியாக உள்ள நிலையில், விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பு
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் படத்திலே விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றார் லோகேஷ், இதையடுத்து, கைதி படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப்படத்தில் லோகேஷின் தனித்துவமான இயக்கம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. லோகேஷ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் படங்களை பார்த்தே நான் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய தீவிர ரசிகரான லோகேஷின் இயக்கத்தில் கமல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் கதை ?
இந்நிலையில்,விக்ரம் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் விஜய்சேதுபதி சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்கும் விஜய்சேதுபதியை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் வேலை பகத் பாசிலுக்குக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக பகத் பாசில், ஏதோ ஒரு குற்றத்தை செய்து விட்டு, சிறைக்கு செல்கிறார்.

மிரட்டும் கமல்
இவர்களின் இந்த திட்டத்தை தெரிந்து கொண்ட கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். விஜய் சேதுபதியை காப்பாற்ற வரும் பகத் பாசில் குழுவுக்கும் கமலுக்கும் இடையில் நடக்கும் சண்டையை விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் பட கதையை கேட்ட ரசிகர்கள் படம் மிரட்டலா இருக்கும் போல என திரையில் கமலின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.