Kamal Haasan 234- ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல், மணிரத்னம்.. ட்ரெண்டாகும் புதிய புகைப்படம்
சென்னை: KH 234 (கமல் ஹாசன் 234) திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலும், மணிரத்னமும் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது.
அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் கமல் ஹாசன் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். அதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டானார்.

இந்தியன் 2: அதில் முக்கியமாக ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த இந்தியன் 2 படம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. அதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன. இன்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதனையடுத்து இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார் கமல். அந்தப் படம் கமலின் 233ஆவது படமாக உருவாகிறது. அதுதொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.
க்ளாஸிக் கூட்டணி: கமல் ஹாசனின் லைன் அப்புகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது கமல் ஹாசன் - மணிரத்னம் இணையும் படம்தான். ராஜ்கமல் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவைகள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நாயகன் மீண்டும்: ஏற்கனவே கமலும் மணிரத்னமும் இணைந்து 1987ஆம் ஆண்டு நாயகன் என்ற க்ளாஸிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்தப் படமும் அதை தொட்டுவிடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் மணிரத்னமும் மும்முரமாக இருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7ல் பேசிய கமல் ஹாசன், நானும் மணிரத்னமும் இணையும் படத்தின் டீசர் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. அது எனது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.
டீசர் ஷூட்டிங்: அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராஜ்கமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கமலும், மணிரத்னமும் KH 234 என்ற போர்டு பின்னணியில் சிரித்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டது. தற்போது படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்த சூழலில் ஷூட்டிங் கமல் ஹாசனும், மணிரத்னமும் சிரித்து பேசிக்கொண்டிருக்கும்படியான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது. இதற்கிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இருக்கும் புகைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











