தமிழர் திருநாள் பொங்கல்... டிரம்ஸ் பீட்... ஃபேமிலி போட்டோஸ்... வாழ்த்து சொன்ன கோலிவுட் பிரபலங்கள்

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்ற்னர்.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என இரட்டை கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழர்களுக்கு கோல்வுட் திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல், விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் பொங்கல் வாழ்த்து கூறி டிவீட் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளனர்.

 கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன் வாழ்த்து

இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத மாபெரும் கலைஞனான கமல், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 டிரம்ஸ் பீட்டுடன் டி.ஆர் வாழ்த்து

டிரம்ஸ் பீட்டுடன் டி.ஆர் வாழ்த்து

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளார் என பன்முக கலைஞனாக வலம் வரும் டி ராஜேந்திர் வித்தியாசமாக பொங்கல் வாழ்த்துக் கூறியுள்ளார். டிரம்ஸ் இசைத்தபடி "குடும்பத்தோட கண்கள், அதுதானே பெண்கள்... ஞாயிறுக்கு அப்புறம் திங்கள், தைப் பொறந்தா பொங்கலு... சூரியனுக்கு படைக்க தான் சர்க்கரை சர்க்கரை பொங்கல்... கதிர் தரும் கதிரவன கரும்பா நினைக்கும் பொங்கல்..." என ரகளையாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 கார்த்தி, சிவகார்த்திகேயன் வாழ்த்து

கார்த்தி, சிவகார்த்திகேயன் வாழ்த்து

அதேபோல் நடிகர் கார்த்தி வேஷ்டி, சட்டை அணிந்து கையில் கரும்புடன் அமர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அவர், "அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் நம் வாழ்க்கை சிறக்கட்டும்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், "உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ! பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்" என தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட போட்டோவுடன் ட்வீட் செய்துள்ளார்.

 விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ட்வீட்

விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ட்வீட்

நடிகர் விஜய் சேதுபதி, "அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்" என ட்வீட்டரில் வாழ்த்தியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து பொங்கல் வாழ்த்துக் கூறியுள்ளார். அதில், "அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

 அருண் விஜய், சமுத்திரகனி வாழ்த்து

அருண் விஜய், சமுத்திரகனி வாழ்த்து

நடிகர் அருண் விஜய்யின் பொங்கல் கொண்டாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ள அவர், அப்பா விஜயகுமார், அம்மா, மனைவி, சகோதரிகள் என ஒட்டுமொத்த குடும்பத்துடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சமுத்திரகனியும் தனது குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனைவி, மகள், மகன் ஆகியோருட்ன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடியுள்ளார் சமுத்திரகனி. இவர்கள் தவிர மேலும் பல நட்சத்திரங்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X