Don't Miss!
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
"இஷ்டத்துக்கு அறிவிக்க இது ஜமீன்தார் கட்சி இல்லை" கரெக்ட் டைமில் வேட்பாளரை அறிவிப்போம்..ஜெயக்குமார்
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பகத்தின் குழந்தையும் என்னுடையது தான்.. கமல் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ பதிவு.. சூர்யாவும் பாராட்டு!
சென்னை : நடிகர் பகத் பாசிலின் மலையன் குஞ்சு படம் இம்மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
நிலச்சரிவுகளில் பாதிக்கப்படுவர்கள் குறித்த கதைக்களத்தை மையமான கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பா.ரஞ்சித்
-
கமல்
இணையும்
படம்
எப்போ...அவரே
சொன்ன
சுவாரஸ்ய
தகவல்

நடிகர் பகத் பாசில்
நடிகர் பகத் பாசில் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா மற்றும் கமலின் விக்ரம் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

பான் இந்தியா ஸ்டார்
பான் இந்தியா படங்களில் நடிக்க தமிழில் அதிக வாய்ப்புகளை பெற்று வருபவர் விஜய் சேதுபதி. அதேபோல மலையாளத்தில் இத்தகைய படங்களின் முதன்மை தேர்வாக மாறியுள்ளார் பகத் பாசில். விக்ரம் படத்தில் ரகசிய உளவாளியாக இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் அதிக வரவேற்பை பெற்றது.

மலையன் குஞ்சு படம்
இந்திய மொழிகளில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு காரணம் பகத் பாசில் இந்தப் படத்தில் அதிகமான காட்சிகளில் நடித்துள்ளதோடு மிரட்டலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்ததுதான். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் மலையன் குஞ்சு என்ற மலையாளப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பகத் பாசில் தயாரிப்பு
பகத் பாசில் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மிகந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிலச்சரிவில் சிக்குபவர்கள், மற்றும் அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் குறித்த கதைக்களத்தோடு இந்தப் படம் உருவாகியுள்ளது.

மலையன் குஞ்சு ட்ரெயிலர்
இந்த ட்ரெயிலரில் பகத் பாசில் நிலச்சரிவில் சிக்கிக் கொள்வதாக காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் காட்சிகளின் ஒளிப்பதிவு மிகவும் மிரட்டலாக காணப்படுகிறது. தொடர்ந்து அந்த நேரத்தில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்பதாக காட்சிகள் விரிகின்றன. அந்தக் குழந்தையை மீட்கும் முயற்சியில் பகத் பாசில் ஈடுபடுவதாக காட்சிகள் காணப்படுகின்றன.

கமல்ஹாசன் பாராட்டு
இந்த ட்ரெயிலர் மிகவும் மிரட்டலாக காணப்படும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் பகத்தின் குழந்தையும் தன்னுடையதுதான் என்றும் எப்போதும் மேன்மை வெல்லட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவும் பாராட்டு
மேலும் தன்னுடைய ஏஜெண்ட்கள் அனைவரும் வெற்றிப்பெற வேண்டும் என்றும் ஒரு குழு என்றால் என்ன என்பதை காட்டுங்கள் என்றும் உணர்ச்சிப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல நடிகர் சூர்யாவும் பகத்தின் இந்த ட்ரெயிலருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். பகத் தன்னுடைய கதைகளால் எப்போதும் தன்னை ஆச்சரியப்படுத்துவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த வெற்றிகள்
இந்த வித்தியாசமான முயற்சியின் ஒளிப்பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது அன்பும் மரியாதையும் எப்போதும் பகத்துக்கு உண்டு என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்துவரும் பகத்திற்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.