கமல் வெளியிட்ட விக்ரம் மேக்கிங் வீடியோ.. காட்சிகளுக்காக எப்படி பங்கமா வேலை செஞ்சிருக்காங்க பாருங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் திரையரங்குகளில் கடந்த மாதம் 3ம் தேதி வெளியானது விக்ரம் படம்.

இந்தப் படம் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற செய்து தற்போது வரை திரையரங்குகளில் சிறப்பான வசூலை குவித்து வருகிறது.

இதனிடையே நேற்றைய தினம் ஓடிடியிலும் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.]

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, காயத்ரி, ஷிவானி, மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து மல்ட்டி ஸ்டாரர் படமாக கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

 லோகேஷ் கனகராஜ் படம்

லோகேஷ் கனகராஜ் படம்

முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற சிறப்பான படங்களை கொடுத்திருந்த லோகேஷ் இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய சர்வதேச தரத்தை நிரூபித்துள்ளார். விக்ரம் படம் சர்வதேச அளவில் ஏறக்குறைய 450 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது ஓடிடியிலும் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த விருப்பம் காட்டி வருகின்றனர். படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

முன்னதாக இந்தப் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷனை படக்குழுவினர் கொடுத்திருந்தனர். கமல் மட்டுமே டெல்லி, மும்பை, கேரளா என பறந்து பறந்து படத்திற்கான பிரமோஷனை செய்திருந்தார். தொடர்ந்து படத்தின் பாடல்கள் உள்ளிட்டவையும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது.

Recommended Video

Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil
பத்தல பத்தல வீடியோ பாடல்

பத்தல பத்தல வீடியோ பாடல்

இந்நிலையில் தொடர்ந்து படத்தின் பிரமோஷன் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பத்தல பத்தல வீடியோ பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இதில் சர்ச்சைக்கு உள்ளான ஒன்றியத்தின் தப்பாலே என்ற வரிகள் நீக்கப்பட்டிருந்தன. படத்திலும் இந்த வரிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், லிரிக் வீடியோவில் மட்டும் இடம் பெற்றிருந்தது.

மேக்கிங் வீடியோ வெளியீடு

தொடர்ந்து படத்தின் இசை உள்ளிட்டவையும் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் சிறப்பான வகையில் இந்த வீடியோ காணப்படுகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை கூறும் இந்த வீடியோவை சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளனர்.

மிரட்டலான மேக்கிங் காட்சிகள்

மிரட்டலான மேக்கிங் காட்சிகள்

இந்த வீடியோவில் படத்தின் அனைத்து கேரக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். சூர்யாவும் உள்ளார். மேலும் கமல் வொர்க் அவுட் செய்யும் வீடியோ, குழந்தை தர்ஷன் காரில் அமர்ந்திருக்கும் காட்சி என மிகவும் சிறப்பாக இந்த வீடியோ உள்ளது. மேலும் பின்னணியில் விக்ரம் பாடலையும் ஓட விட்டிருப்பது சிறப்பாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X