நாளை காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. இன்ஸ்டா லைவில் கமல், விஜய் சேதுபதி.. தலைவன் இருக்கின்றான் அப்டேட்?
சென்னை: இன்ஸ்டாகிராம் லைவில் நாளை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளனர்.
Recommended Video
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தலைவன் இருக்கின்றான். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் வடிவேல் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியவில்லை.

ஆனால் உங்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், எனக்கு வாய்புத் தாருங்கள் என கேட்டார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளதாக அரசல்புரசலாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படம் குறித்து நாளை பகல் 12 மணிக்கு லைவ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி, அபிஷேக் ராஜாவுடன் பங்கேற்கவுள்ளனர்.

இதுதொடர்பான போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
இதில் தலைவன் இருக்கின்றான் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











