மன்னிப்பு கேட்ட கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

By Vignesh Selvaraj

Recommended Video

கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மும்பை : 'மொமண்டோ', 'பிரஸ்டீஜ்', 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லர்', 'டன்கிர்க்' போன்ற படங்களின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

இந்தியாவில் நோலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் ரோல்மாடலான நோலன் நேற்று நம்மவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

'டன்கிர்க்' படத்தை திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக நோலனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமல். கமலின் 'பாபநாசம்' படத்தை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார் நோலன்.

கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வருகை

கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வருகை

ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் நடத்தும் நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கும் முறையை தொடர்வது குறித்து கருத்துகளைப் பதிவு செய்தார் நோலன். இதற்காக தனது மனைவி எம்மா தாமஸ் மற்றும் அவரது குழந்தைகளோடு நேற்று மும்பை வந்தார்.

உலக சினிமா இயக்குநர்

உலக சினிமா இயக்குநர்

இன்செப்ஷன், டார்க் நைட் போன்ற பிரபலமான படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது 'டார்க் நைட்' படத்தில் ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. ஹாலிவுட்டில் மிகவும் மதிக்கதக்க இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஃபிலிமில் படம்பிடிப்பதுதான் நோலனின் ஸ்டைல்.

கமலை சந்தித்த நோலன்

கமலை சந்தித்த நோலன்

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை சென்றிருந்த கமல்ஹாசன் அங்கு நோலனை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "மதிப்புக்குரிய கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். டன்கிர்க் படத்தை திரையரங்கில் பார்க்காமல், டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன் எனக் கூறியுள்ளார்.

நோலன் இன்ப அதிர்ச்சி

அதற்கு பதிலாக 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு வழங்கினேன்" என்று தெரிவித்திருந்தார் கமல். மன்னிப்பு கேட்ட கமலுக்கு "உங்களது 'பாபநாசம்' படம் பார்த்தேன்" எனச் சொல்லி நோலன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நோலன்.

நம்பமுடியவில்லை

நம்பமுடியவில்லை

"பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை" என்று மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல். உலகின் பிரபலமான இயக்குநர் நம் தமிழ்ப்படத்தை பார்த்ததை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X