குமுறி குமுறி அழுத அனிதா.. குஷிப்படுத்திய கமல்.. சுமங்கலி மேட்டர் சக்சஸ்.. அதிரடியான அடுத்த புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் சுமங்கலி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல்ஹாசன்.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ் மேட்டுகளை சந்திக்கும் கமல், அந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களுடன் விவாதிப்பார்.

அந்த வகையில் சனிக்கிழமையான இன்றும் ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கிறார் கமல். முதல் புரமோவில் பாப்கானை கொறித்துக் கொண்டே கெத்து காட்டினார்.

நவராத்திரி செலிபிரேஷன்

நவராத்திரி செலிபிரேஷன்

இந்நிலையில் இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடந்த சுமங்கலி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நவராத்திரி செலிபிரேஷன் நடைபெற்றது.

அழைத்த சுரேஷ்

அழைத்த சுரேஷ்

அப்போது மங்களகரமாக இருக்க வேண்டும் என்று சுமங்கலி யாராவது வாருங்கள் என அழைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அப்போது அனிதா அருகில் இருக்க நீ முதலில் போடும்மா என பானையில் தானியத்தை போட சொன்னார்.

சுமங்கலியாய் இல்லாவிட்டால்

சுமங்கலியாய் இல்லாவிட்டால்

அவரை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அந்த பணியை தொடர்ந்தனர். தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அனிதா சம்பத் நான் சுமங்கலி என்பதால் தான் என்னை அழைத்தார்கள் இல்லாவிட்டால் அழைத்திருக்க மாட்டார்களா என்றார்.

கோபமான சுரேஷ்

கோபமான சுரேஷ்

சுமங்கலி அமங்கலி என யாரையும் ஒதுக்கக்கூடாது என்றும் அனிதா சம்பத் கூறினார். தான் செய்ததை குறிப்பிட்டு பேசியதால் அனிதா மீது கோபமடைந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. தன்னிடம் மீண்டும் மீண்டும் வம்பிழுப்பதாக கூறி புலம்பினார்.

கதறி கதறி அழுதார்

கதறி கதறி அழுதார்

இதனை தொடர்ந்து தனக்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லை என கன்ஃபெஷன், பாத்ரூம் என கதறி கதறி அழுதார். பிக்பாஸே ஆறுதல் கூறும் அளவுக்கு இருந்தது அவரது பர்ஃபாமன்ஸ்.

மங்களகரமா ஆரம்பிக்கணும்

மங்களகரமா ஆரம்பிக்கணும்

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். அதில் மங்களகரமாக ஆரம்பிக்கணும், சுமங்கலி மேட்டருக்கு வருவோம் என கூறி ஆரம்பிக்கிறார் கமல்.

ஷிவானி சப்போர்ட்

ஷிவானி சப்போர்ட்

அப்போது அந்த இடத்தில் அது தேவையில்லைன்னு தோனுது என்கிறார் அர்ச்சனா. அதனை தொடர்ந்து அது குறித்து கருத்து சொல்லும் ஷிவானி, பேசுனதும் சரி பேசின இடமும் சரி என்கிறார்.

நிறைய பேருக்கு போகனும்

நிறைய பேருக்கு போகனும்

தொடர்ந்து பேசும் அனிதா, நான் மாத்திக்க மாட்டேன் சார். நான் கரெக்ட்டா பேசுனதாதான் இந்த இடத்துல நினைக்கிறேன், ஏன்ன இது நிறைய பேருக்கு போய் சேர வேண்டிய விஷயமுன்னு நான் நம்புறேன் என்று கூறுகிறார்.

கைகளை தட்டி கமல்

கைகளை தட்டி கமல்

அதற்கு பதில் கொடுக்கும் கமல், நீங்க பேசுன பேச்சுக்கு செய்ய வேண்டிய காரியம் ஒரு கையில செய்ய வேண்டியது இல்ல இரண்டு கையில செய்யணும் என கைகளை தட்டுகிறார்.

எங்கேதான் பேசுவது?

எங்கேதான் பேசுவது?

அதற்கு கைகளை கூப்பி நன்றி சொல்கிறார் அனிதா. தொடர்ந்து பேசும் கமல், எங்கதான் பேசுறது எப்போ பேசுறது என கேட்கிறார். இப்படியாக உள்ளது
பிக்பாஸின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X