Kamal: காட்ஃபாதர் லுக்கில் மிரட்டும் கமல்... ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வெறித்தனமான போஸ்டர்

சென்னை: ரசிகர்களால் உலகநாயகன் என கொண்டாடப்படும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2வில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இந்தியன் தாத்தா கெட்டப் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.

அதனால், இந்தியன் 2 படத்தில் 'இந்தியன் தாத்தா' கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், கமலின் காட்ஃபாதர் பட கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 Kamal As The GodFather Fan-made Posters are trending in social media

காட்ஃபாதர் லுக்கில் மிரட்டும் கமல்:சினிமா ரசிகர்களின் உலகநாயகன் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் அப்படியே பொருந்திவிடுவதில் சகலகலா வல்லவன் அவர். கதைக்கும் கதைக்களத்துக்கும் உயிர் கொடுப்பதில் கமலின் நடிப்பும் அவரது கெட்டப் மாற்றமும் மாஸ் காட்டும். நாயகன், புன்னகை மன்னன், இந்தியன், ஆளவந்தான், அவ்வை சண்முகி, தசாவதாரம் என பல படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தற்போது இந்தியன் 2 படத்திலும் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டான 'இந்தியன் தாத்தா' கெட்டப்பில் நடித்துள்ளார் கமல். அதனால், இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்திலும் படங்களில் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களிலும் கமல் வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் கமலின் புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் படம் மெஹா ஹிட் அடித்தது. இதில் கமலின் கெட்டப், கேரக்டர், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக தமிழில் ஹிட் அடித்த நாயகன், ஹாலிவுட்டின் ப்ளாக் பஸ்டரான 'தி காட்ஃபாதர்' படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

 Kamal As The GodFather Fan-made Posters are trending in social media

அதனால், கமலின் கெட்டப் அப்படியே தி காட்ஃபாதர் ஹீரோவின் சாயலில் இருக்கும். ஆனால், ரியலாகவே தி காட்ஃபாதர் ஹீரோ லுக்கில் கமல்ஹாசன் இருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் பேன்மேட் போஸ்டர் கிரியேட் செய்துள்ளார். அதில், ஹாலிவுட் ஹீரோ மார்லன் பிராண்டோவிற்கே சவால் விடும் வகையில் கமல் செம்ம மாஸ்ஸாக காணப்படுகிறார்.

அச்சு அசல் அப்படியே ஹாலிவுட் ஹீரோ போல மாஸ் காட்டும் கமலின் இந்த போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலின் வெறித்தனமான லுக், மிரட்டல் காஸ்ட்யூம் என ரியல் காட்ஃபாதருக்கே சவால் விடுகிறார். பேன்மேட் போஸ்டராக இருந்தாலும் ஒரிஜினலுக்கு கொஞ்சம் கூட குறையில்லாமல் செம்மையாக இருப்பதாக கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டரை ஜதுர்சன் பிரபாகரன் என்ற ரசிகர் வடிவமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X